சின்னச்சுருளி அருவியில் நீர் வரத்து அதிகரிப்பு  | தேனி செய்திகள் | Dinamalar
சின்னச்சுருளி அருவியில் நீர் வரத்து அதிகரிப்பு 
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 அக்
2021
03:49

ஆண்டிபட்டி-மலைப்பகுதியில் பெய்யும் மழையால் மேகமலை சின்னச்சுருளி அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அனுமதிக்கவில்லை. தேனி மாவட்ட சுற்றுலா இடங்களில் சின்னச்சுருளி அருவி பிரபலம் ஆகி வருகிறது. கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்வதால் அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. அருவியின் அழகை காண தேனி, மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து அதிக சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆவலுடன் வரும் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். தற்போது கொரோனா தளர்வுகள் ஏற்பட்டுள்ளதால், அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி வழங்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X