படகு சவாரி மழையால் நிறுத்தம் | தேனி செய்திகள் | Dinamalar
படகு சவாரி மழையால் நிறுத்தம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 அக்
2021
03:50

மூணாறு--இடுக்கி மாவட்டம் அய்யப்பன்கோவிலில் துவங்கிய 'கயாக்கிங்' சாகச படகு சவாரி மழையால் நிறுத்தப்பட்டது.மாவட்டத்தில் சுற்றுலாவுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் வகையில் அய்யப்பன்கோவிலில் 'கயாக்கிங்' சாகச படகு சவாரி விழா நேற்று முன்தினம் துவங்கி மூன்று நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், மாவட்ட சுற்றுலா மேம்பாட்டுதுறை, அய்யப்பன் கோவில் மற்றும் காஞ்சியாறு ஊராட்சிகள் துறையினர் இணைந்து செய்தனர். ஒருவர் மற்றும் இருவர் பயணிக்கும் கயாக்கிங் படகுகளில் சுற்றுலா பயணிகள் சாகசம் செய்து பெரியாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தொங்கு பாலத்தையும் பார்த்து மகிழ்ந்தனர். படகு சவாரி செய்வோருக்கு 'லைப் ஜாக்ெகட்' உள்பட பாதுகாப்பு வசதி செய்யப்பட்டன.விழா இன்று நிறைவு பெறும் நிலையில் மாவட்டத்தில் அதிதீவிர மழைக்கான 'ரெட் அலர்ட்' நேற்று விடுக்கப்பட்டதால், மதியத்துடன் சாகச படகு சவாரி நிறுத்தப்பட்டது.-------------

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X