தனியார் ஊழியரை கடத்தியவர் கைது | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
தனியார் ஊழியரை கடத்தியவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 அக்
2021
07:38

திண்டிவனம் : திண்டிவனத்தில் தனியார் கம்பெனி ஊழியரை பணம் கேட்டு, கடத்திய வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.



திண்டிவனம் தரம்சந்த் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் வினோத், 26; இவர், இருதயபுரம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த மாதம் 27ம் தேதி இரவு பணியை முடித்து வரும்போது 5 பேர் கொண்ட கும்பலால் கடத்தப்பட்டார். மேலும், 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் விடுவதாக கொலை மிரட்டல் விடுத்தனர்.



பின், போலீசாருக்கு பயந்த அந்த கும்பல், வினோத்தை நொளம்பூர் அருகே இறக்கி விட்டுச் சென்றனர்.இதுகுறித்து வினோத் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து கடத்தலில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர் உட்பட 4 பேரை கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியான ஈச்சேரியைச் சேர்ந்த பச்சையப்பன் மகன் அருள் என்கிற சசிக்குமார், 35; என்பவரை நேற்று கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X