கர்ப்பிணிக்கு சிகிச்சை மறுத்த டாக்டர் மீண்டும் 'டிரான்ஸ்பர்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2021
08:58

திருப்பூர்:உடுமலை அரசு மருத்துவமனையில், கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்க மறுத்த டாக்டர் ஜோதிமணியை, கூடலுாருக்கு மாற்றி சுகாதாரத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் காரத்தொழுவை சேர்ந்தவர் மருதமுத்து, 33; விவசாயி. இவரது மனைவி ராஜராஜேஸ்வரி, 24, பிரசவ சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.குழந்தை வயிற்றில் இறந்துவிட்டதால், கடும் வயிற்று வலியுடன் அவதிப்பட்டார். டாக்டர் ஜோதிமணி நான்கு நாட்களாகியும், உரிய சிகிச்சை அளிக்கவில்லை.அதன்பின், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வயிற்றில் இருந்த குழந்தை அகற்றப்பட்டது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுத்த ஜோதிமணியே, தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தது தெரியவந்தது.இதுகுறித்து கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. துறைரீதியான நடவடிக்கையாக, ஜோதிமணி தாராபுரத்துக்கு மாற்றப்பட்டார். அவர், பணியில் சேராமல் காலம் கடத்தி வந்தார்.திருப்பூர் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் பாக்கியலட்சுமி கூறுகையில், ''இடமாற்றம் செய்யப்பட்டும், ஜோதிமணி தாராபுரம் அரசு மருத்துவமனை பணியில் சேரவில்லை. தற்போது, நீலகிரி மாவட்டம், கூடலுார் அரசு மருத்துவமனைக்கு மாற்றி சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இது, அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கையின் ஒரு பகுதிதான்,'' என்றார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X