2,400 எம்.டி.சி., பஸ்களில் விரைவில் 'சிசிடிவி' கண்காணிப்பு: பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய ஏற்பாடு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

17 அக்
2021
10:51
பதிவு செய்த நாள்
அக் 17,2021 10:46

சென்னை ; பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய ஏற்பாடுபூந்தமல்லி, அக். 17--மாநகர பஸ்களில் பயணியரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சோதனை ஓட்டமாக மூன்று பஸ்களில் பொருத்தப்பட்ட 'சிசிடிவி' கேமரா திட்டம் வெற்றி பெற்றுள்ளது.இதையடுத்து, 2,400 பஸ்களில், கேமரா பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சென்னை மாநகர போக்குவரத்து கழகம், தினசரி 3,365 பஸ்களை இயக்குகிறது. இதன் வாயிலாக, நாள்தோறும், 42 லட்சம் பேர் பயணிக்கின்றனர். சமீபத்தில், மகளிருக்கு சாதாரண பஸ்களில் இலவச பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாநகர பஸ்களில் பயணிக்கும் மகளிர் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து உள்ளது.


சோதனை ஓட்டம் வெற்றி
இந்நிலையில், பயணியரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பஸ்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் திட்டத்தை, மாநகர போக்கு வரத்து கழகம் செயல்படுத்த உள்ளது. 'நிர்பயா' திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக, சென்னையில் புதிதாக இயக்கப்படும் சிவப்பு நிற டீலக்ஸ் பஸ்களில், கண்காணிப்பு கேமரா பொருத்த திட்டமிடப்பட்டது. சோதனை ஓட்டமாக, இரண்டு மாதத்திற்கு முன், தடம் எண் 54, பிராட்வே- - பூந்தமல்லி; ஈ 18, கூடுவாஞ்சேரி- - பிராட்வே; ஜி 18, கூடுவாஞ்சேரி- - தி.நகர் ஆகிய மூன்று வழித்தடங்களில், தலா ஒரு பஸ் தேர்வு செய்யப்பட்டு, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது.


பஸ்சின் முன் படிக்கட்டு, பின் படிக்கட்டு எதிர்புறம் தலா ஒரு கேமரா மற்றும் ஓட்டுனர் இருக்கைக்கு எதிரில் இருந்து ஒட்டுமொத்த பஸ்சையும் கண்காணிக்கும் வகையில் ஒன்று என, மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டன. கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனம், ஐந்து ஆண்டுகளுக்கு அவற்றை பராமரிக்கும். அந்த நிறுவனத்தினர் மட்டுமின்றி, மாநகர போக்குவரத்து கழக தலைமை அலுவலக கட்டுப்பாட்டு அறையில் இருந்தும், கேமரா பதிவுகளை பார்க்கலாம்.இரண்டு மாதங்களாக இச்சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து, முதல் கட்டமாக, 2,400 புதிய பஸ்களில், கேமரா பொருத்தும் பணி தீவிரமடைந்துள்ளது.இறுதிக்கட்டம்
இதற்காக, தனியார் நிறுவன தொழில்நுட்ப குழுவினர், பல்வேறு பிரிவுகளாக, சென்னையில் உள்ள அனைத்து மாநகர பஸ் பணிமனைகளில், இரவு நேரங்களில், பஸ்களில் கேமரா பொருத்துவதற்கான, வடம் பதிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஓரிரு மாதங்களில், சென்னையில் இயக்கப்படும், 75 சதவீதம் பஸ்களில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.இதன் வாயிலாக, மாநகர பஸ் பயணியரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதுடன், பஸ் ஊழியர்களின் செயல்பாடுகளும் கண்காணிக்கப்பட உள்ளன.பழைய பஸ்களில் இல்லை!


தற்போது, 2,400 பஸ்களில் மட்டும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளது. மாநகர போக்குவரத்து கழகத்திடம், 3,500 பஸ்கள் உள்ளன. புதிய பஸ்களில் முன்னுரிமை அடிப்படையில் கேமரா பொருத்தப்படுகிறது. பழைய பஸ்களில் கேமரா பொருத்துவதா அல்லது அந்த பஸ்களின் ஆயுட்காலம் முடியும் நிலையில், கேமரா கட்டமைப்புடன் புதிய பஸ்களை வாங்குவதா என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.


மாநகர போக்குவரத்து


கழக அதிகாரிகள்விரைவில் ரயில்களிலும் கேமரா!
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடந்த சுவாதி கொலை வழக்கிற்கு பின், நிர்பயா திட்டத்தில், அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என, ரயில்வே அதிகாரிகள் கூறினர்.ஆனால், பெரும் தாமதத்திற்கு பின், தற்போது தான், அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி வேகம் எடுத்துள்ளது.விரைவில், சென்னை மற்றும் புறநகரில், 100 சதவீதம் ரயில் நிலையங்களில் கேமரா பொருத்தப்படும். மின்சார ரயில் பெட்டிகளில் கேமரா பொருத்த, தெற்கு ரயில்வே அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். விரைவில் அதற்கான பணிகளும் துவங்கும் என, ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.


'ரோமியோ'க்களுக்கு 'செக்'
மாநகர பஸ்களில் 'ரோமியோ'க்களின் நடமாட்டம் இன்றும் இருக்கத்தான் செய்கிறது. படிக்கட்டுகளில் பயணிப்பது, பெண் பயணியரை இடிப்பது, சில்மிஷத்தில் ஈடுபடுவது, பிக் பாக்கெட் அடிப்பது போன்ற சமூக விரோத செயல்களும் நடக்கும். சமீபகாலமாக கல்லுாரி, பள்ளி மாணவர்களின் அட்டகாசமும் அதிகரித்து வருகிறது. இவை அனைத்தையும் கண்காணித்து, உடனுக்குடன் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதால், பஸ்களில் கேமரா பொருத்தும் திட்டத்திற்கு, மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (20)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
18-அக்-202102:00:10 IST Report Abuse
மலரின் மகள் சென்னையில் ஓடும் பேருந்துகளுக்கு இது அவசியம் தான என்று தெரியவில்லை. நள்ளிரவு பன்னிர்ண்டு மணியானாலும் பேருந்துகளில் கூட்டமிகுந்தே இருக்கும். பெரியளவில் கொள்ளை கொலை பேருந்துகளில் நடந்ததாக தெரியவில்லை. ஓட்டை பேருந்துகளில் வரும் மழைநீர் போன்ற பிரச்சினைகள், உடைந்த கிழிந்த தகர்ணகளால் ஏற்படும் விபத்துக்கள் தான் அதிகம். மற்றபடி சிலர் செய்யும் சில்மிஷங்கள், பிக் பாக்கெட்கள் போன்ற குற்றங்களை தடுப்பதற்கு இது எதுவாக இருக்குமா? எனக்கு தெரிந்து எந்த போலீஸ் காரரும் எந்த நேரத்திலும் பேருந்தில் ஏறி கண்காணிப்பை செய்ததாக இல்லை. மப்டியில் செல்லவேண்டிய அவசியமில்லை அது பயன்தராது. முழு சீருடையில் பேருந்துகளில் அவ்வப்போது ஏறி திருடர்களுக்கான திருட்டுக்கான சமிக்சைகள் இருக்கிறதா என்று கண்காணிக்கலாம், தென்பட்டால் தவறு நடவாமல் தடுக்கலாம். மேலும் சில நிறுத்தங்களில் ஏறி வேறு நிறுத்தங்களில் இறங்கி கொள்ளலாம். எந்த எந்த தடங்களில் பகுதிகளில் திருடு இருக்கும் என்பது காவலர்களுக்கும் நடத்துனர்களுக்கும் தெரிந்திருக்க வாய்ய்புக்கள் அதிகம். இணைந்து கண்காணிப்பை மேம்படுத்தலாம். நேரடியாக செய்யும் கண்காணிப்பால் குற்றவாளிகள் அச்சம் கொள்வர் மேலும் குற்றச்செயலில் சாதாரணமாக ஈடுபட மாட்டார்கள். போலீசை பார்த்து அவர்கள் கண்காணிக்கிறார்கள் என்றால் குற்றவாளிகள் நிச்சயம் ஒதுங்கத்தான் செய்கிறார்கள். போலீசின் கண்காணிப்பு இல்லாத பகுதிகளிலேயே குற்றங்கள் இருக்கும். இது நிதர்ஷணம். குற்றவாளிகள் போலீசை கண்டு ஓடி ஒழித்தான் செய்வார்கள். அதுதான் உண்மை. அவ்வாறு இல்லை என்றாலோ அல்லது வேறுவிதமாக இருந்தாலோ, அவர்கள் குற்றவாளிகள் பட்டியலில் இருந்து மேம்பாட்டு தீவிரவாதிகள் பயங்கரவாதிகளாக உயிருக்கு மதிப்பு தெரியாதவர்களாக இருப்பார்கள். ஆக வேண்டியது போலீசின் நேரடி கண்காணிப்பே. எங்களுக்கு உண்டான வேதனை என்னவென்றால், டிஜிபி ஆக இருந்து ஓய்வு திரைமணியானவர் என்று சொல்லப்பட்டவரே ஒரு பெட்டியில் தமிழகத்தில் எட்டு கோடி பேர் இருக்கிறார்கள், மிக பெரிய நிலப்பரப்பு அதற்கு வெறும் சில பத்தாயிரம் அளவில் காலவர்களை வைத்து கொண்டு ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பை அளிக்க முடியாது என்று தெரிவித்தார். மலரில் கூட செய்திகள் வந்து நாமும் கருத்து தெரிவித்திருந்தோம். ஐம்பது அறுபது மாணவர்கள் தேர்வு எழுதும் பெரிய ஹாலுக்கு ஒரே ஒரு ஆசிரியரின் கண்காணிப்பு தான். ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு ஆசிரியர் என்று பள்ளி கல்லூரிகள் செய்வதில்லை. ஆசிரியர் கண்காணிக்கிறார் என்றாலே மாணவர்கள் தவறிழைக்கும் எண்ணத்தை விட்டு விடுவார். அதுபோலத்தான் காவலர்கள் கண்காணிக்கிறார்கள் என்றால் குற்றம் குறையும். இந்த அடிப்படையை கூட அறியாமல் இருந்திருக்கிறார் தமிழகத்தின் உயர் பதவியில் என்றால் நம் விதியை என்ன சொல்வது. சந்தேகத்திற்கு இடமாக யாரும் நடமாடுகிறார்களா என்று கவனிப்பது விட்டு விட்டு ஹெல்மெட் அணியாமல் செல்கிறீர்களா சாலைவிதிகளில் சிறிது கவன குறைவாக இருந்து விடுகிறார்களா என்று மிகவும் உன்னிப்பாக, கண்கொத்தி பாம்பு போல பார்த்து பிடித்து வருமான வழிகையில் இருக்கிறார்கள் என்று கூட சொல்கிறார்கள். உபரி வருமானமே பிரதானம் என்றில்லாமல், சேவையே குறிக்கோள் என்று மாறவேண்டும். அவ்வாறு இருந்தால் விடியல் நிச்சயம். முதல்வரின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது அனைத்தும். குற்றங்கள் குறைக்க முயற்சிப்பதை விட, குற்றங்கள் நடவாமல் தடுப்பதற்கு நேரடி கண்காணிப்பு தேவை. இன்றைய நிலையில் நான் போலீஸ் துரையின் உயர்ந்த இடத்தில் இருந்திருந்தால், போலீசிற்கே உண்டான, என்றோ மறைந்து போன மிடுக்கை கொண்டு வந்திருப்பேன். மிடுக்காக இருக்கவேண்டும் நமது காவல் துறை. ஸ்காட்லான்ட் போலீசை விட சிறந்தது என்று மீண்டும் நிரூபிக்கவேண்டும். நம்புவோம். நன்றி
Rate this:
Cancel
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
17-அக்-202122:47:32 IST Report Abuse
DARMHAR எத்தனுக்கு எத்தன் இருப்பது என்னவோ இருப்பது உண்மை போலும்
Rate this:
Cancel
R KUMAR - Oregon,யூ.எஸ்.ஏ
17-அக்-202119:41:17 IST Report Abuse
R KUMAR சில பேரூந்துகளில் பொருத்தப்பட்ட டீ.வி-க்கள் என்னவாயிற்று என்று தெரியவில்லை. அவற்றை விற்று பையில் போட்டுக்கொண்டு விட்டனர். அதே நிலை இந்த காமெராக்களுக்கும் சில ஆண்டுகளில் ஏற்படலாம். எல்லாம் அவர்களுக்கே புரியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X