மாணவர்கள் எண்ணங்களை சிதறவிடக்கூடாது! முதன்மை மாவட்ட நீதிபதி 'அட்வைஸ்' | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
மாணவர்கள் எண்ணங்களை சிதறவிடக்கூடாது! முதன்மை மாவட்ட நீதிபதி 'அட்வைஸ்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 அக்
2021
22:46

வால்பாறை:படிக்கும் வயதில் மாணவகள் தங்களது எண்ணங்களை சிதறவிடக்கூடாது, என, வால்பாறையில் நடந்த சட்ட விழிப்புணர்வு முகாமில் முதன்மை மாவட்ட நீதிபதி தெரிவித்தார்.வால்பாறை வட்ட, சட்ட பணிகள் குழு சார்பில் விழிப்புணர்வு மற்றும் பிரசார நிகழ்ச்சி, துாய இருதய மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு வால்பாறை வக்கீல்கள் சங்க தலைவர் ஷாநவாஸ்கான் தலைமை வகித்தார்.


கோவை முதலாவது மாவட்ட நீதிபதி நாகராஜன், வால்பாறை கோர்ட் மாஜிஸ்திரேட் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வக்கீல் விஸ்வநாதன் வரவேற்றார்.நிகழ்ச்சியில், கோவை முதன்மை மாவட்ட நீதிபதி சக்திவேல் பேசியதாவது:இளம் வயது திருமணம், காதல் திருமணம், கூட்டுக்குடும்பம் போன்ற பிரச்னைகளால், கோவை மாவட்டத்தில் அதிக அளவில் விவாகரத்து வழக்குகள் பதிவாவது வேதனையளிக்கிறது.கல்லுாரி மாணவர்கள் படிக்கும் வயதில் எண்ணங்களை சிதற விடக்கூடாது.


தேவையற்ற சிந்தனைகளுக்கு மனதில் இடம் தரக்கூடாது. அதிக அளவில் புத்தகங்களை படித்து, பொதுஅறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.வன்கொடுமை சட்டம், வரதட்சணை கொடுமை சட்டம், சிறுவயதில் திருமண சட்டம் உள்ளிட்ட அனைத்து சட்டங்கள் குறித்து, மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். கல்லுாரியில் படிக்கும் வயதில் காதல் வசப்படக்கூடாது. இதனால் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் எந்த பிரச்னையானாலும், சட்ட பணிக்குழுவிடம் புகார் தெரிவிக்கலாம். மனுக்கள் வாயிலாக தெரிவித்தால், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் பேசினார். சட்டம் சார்ந்த தன்னார்வ பணியாளர் சுரேஷ் நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X