வால்பாறையில் தொடர் மழை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2021
23:02

வால்பாறையில் தொடர் மழைவால்பாறையில் இந்த ஆண்டு பெய்த, தென்மேற்கு பருவ மழையால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை, ஐந்து முறை நிரம்பியது. தொடர் மழையால், பி.ஏ.பி., பாசனத் திட்டத்தில் உள்ள காடம்பாறை, மேல்ஆழியாறு, ஆழியாறு மற்றும் பரம்பிக்குளம் அணைகளும் நிரம்பின.இதனால், இந்தாண்டு பாசன நீருக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்பதால், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனிடையே, தென்மேற்குப்பருவ மழை விடைபெறும் நிலையில், கடந்த மூன்று நாட்களாக வால்பாறையில் சாரல்மழையாக பெய்கிறது.


இடைவிடாமல் பெய்யும் மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் பனி மூட்டம், சாரல் மழை நிலவுகிறது. இரவு நேரத்தில் கடுங்குளிர் நிலவுவதால், வால்பாறை வந்துள்ள சுற்றுலா பயணிகள் வெளியிடங்களுக்கு செல்ல முடியாமல் அலைமோதினர்.ஹிந்து முன்னணி பயிற்சி முகாம்கோவை தெற்கு மாவட்ட, ஹிந்து முன்னணி சார்பில், ஒரு நாள் பண்பு பயிற்சி முகாம், கிணத்துக்கடவு, எல்.ஜெ.ஜெ., திருமண மண்டபத்தில் நேற்று காலை துவங்கியது. பயிற்சி முகாமுக்கு, கோவை கோட்ட செயலாளர் அசோக்குமார் தலைமை வகித்தார்.நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் அண்ணாதுரை பங்கேற்று, ஹிந்து முன்னணியினருக்கான பயிற்சி குறித்தும், கடைபிடிக்க வேண்டிய பண்புகள் குறித்தும் விளக்கினார்.


நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர்கள் சிவகுமார், செல்வகுமார், கோவிந்தராஜ் மற்றும் நகர, ஒன்றிய, ஹிந்து முன்னணி பொறுப்பாளர்கள்பங்கேற்றனர்.சத்துணவு ஊழியர்கள் தீர்மானம்கிணத்துக்கடவு வட்டார, சத்துணவு பணியாளர்கள் பங்கேற்ற வட்டக்கிளை கூட்டம், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்தது.


கூட்டத்துக்கு, கோவை மாவட்ட சத்துணவு ஊழியர் சங்க தலைவர் தேசிங்குராஜன் தலைமை வகித்தார். மாநில தலைவர் ராஜா, ஊர்நல விரிவு அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் சோபனா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கமணி வரவேற்றார். கூட்டத்தில், சத்துணவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியத்தை அமல்படுத்த வேண்டும்.


சமையல் செய்ய உபயோகப்படுத்தும் காஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கூடுதல் மானியத்தொகையை வழங்க வேண்டும்.சமையலர், உதவியாளர் மற்றும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும் என, உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கமணி நன்றி தெரிவித்தார்.


பாசனத்துக்கு 3வது சுற்று நீர் திறப்பு


பி.ஏ.பி., பாசன திட்டத்தில், செட்டியக்காபாளையம் கிளை வாய்க்கால் வாயிலாக, ஆண்டிபாளையம், சேரிபாளையம், எம்மேகவுண்டன்பாளையம், தேவனாம்பாளையம், செட்டியக்காபாளையம், கோதவாடி, பட்டணம், நல்லட்டிபாளையம், மாசநாயக்கன்புதுார்ஆகிய பகுதிகளில், 2,500 ஏக்கர் நிலங்கள்பாசனம் பெறுகிறது.


விவசாயிகள் கூறுகையில், ''இப்பகுதியில் எதிர்பார்த்த அளவுக்கு பருவமழை பெய்யவில்லை. உழவு செய்யாமல், நிலம் வறண்ட நிலையில் காணப்பட்டது. தற்போது, பி.ஏ.பி., திட்டத்தில் இருந்து பாசனத்துக்கு, மூன்றாவது சுற்று தண்ணீர் திறக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது,''என்றனர்.சாகுபடிக்கான செயல்விளக்க பயிற்சி உடுமலை வட்டார வேளாண்துறை சார்பில், தேசிய உணவு பாதுகாப்புத்திட்டத்தின் கீழ், உளுந்து செயல் விளக்க திடல் அமைக்கப்பட்டுள்ளது.


இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு உளுந்து விதை உட்பட இடுபொருட்கள் மானியத்தில் வழங்கப்படுகிறது. இந்த விவசாயிகளுக்கான செயல்விளக்க பயிற்சி முகாம், வேளாண் விரிவாக்க மையத்தில் நடந்தது. வட்டார வேளாண் உதவி இயக்குனர் தேவி, உணவு பாதுகாப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் அரசப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.முகாமில், உளுந்து விதையினை, விதை நேர்த்தி செய்தல், பூக்கும் திறனை அதிகரிக்கும், டி.ஏ.பி., கரைசல் தயாரித்தல், ரைசோபியம், பாஸ்போபாக்டீரியா பயன்பாடு, குறித்த செயல்விளக்கம்அளிக்கப்பட்டது.


சாகுபடியில் பயிர் எண்ணிக்கையை பராமரித்தல் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. திட்டபயிற்சியாளர் லாவண்யா விவசாயிகளுக்குபயிற்சியளித்தார். உடுமலை சுற்றுப்பகுதிவிவசாயிகள் பங்கேற்றனர்.பள்ளிக்கு குட்டியுடன் யானை 'விசிட்'வால்பாறையில் உள்ள எஸ்டேட்களில், தனித்தனி கூட்டமாக காட்டுயானைகள் முகாமிட்டுள்ளன. பகல் நேரத்தில் எஸ்டேட் அருகிலுள்ள சோலை காடுகளில் இருக்கும் யானைகள், இரவு நேரத்தில் எஸ்டேட்களில் தொழிலாளர்கள் குடியிருப்பு அருகே முகாமிடுகின்றன.


வால்பாறை, வறட்டுப்பாறை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு நேற்று அதிகாலை குட்டியுடன் வந்த யானை, பள்ளி தடுப்பு சுவரை இடித்து சேதப்படுத்தியது.அதன் பின், சத்துணவு மைத்திற்குள் புகுந்து, அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை உட்கொண்டதோடு, சமையல் பாத்திரங்களையும் சேதப்படுத்தின.


இது குறித்து, பள்ளி சத்துணவு அமைப்பாளர் சகுந்தலா கொடுத்த தகவலின் பேரில், யானையால் ஏற்பட்ட சேதம் குறித்து, வனத்துறையினர் நேரில் ஆய்வு செய்தனர்.கட்சி கொடியேற்று விழா உடுமலை அருகே, சனுப்பட்டியில், அ.தி.மு.க., வின் பொன் விழாவையொட்டி, கட்சி கொடியேற்றப்பட்டது. குடிமங்கலம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், நடந்த விழாவில், ஒன்றிய செயலாளர் முரளி கட்சிக்கொடியேற்றினார்.


தெற்கு ஒன்றிய செயலாளர் புஷ்பராஜ் முன்னிலை வகித்தார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கிராம மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. சோமவாரப்பட்டி கூட்டுறவு சங்கத்தலைவர் அன்பர்ராஜன், கொண்டம்பட்டி ஊராட்சி செயலாளர் சதாசிவம் உட்பட பலர் பங்கேற்றனர்.


மூலிகை தேநீர் வினியோகம்


உடுமலை, கிளை நுாலகம் எண் 2ல், அரசு யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் மையத்துடன் இணைந்து, நடத்திய மூலிகை தேநீர் வழங்கும் நிகழ்ச்சிக்கு நுாலகர் கணேசன், தலைமை வகித்தார்.நிகழ்ச்சியை டாக்டர் ராகவேந்திரசாமி, துவக்கி வைத்தார். பின், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்த்தொற்று, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசினார். இதையடுத்து, பொதுமக்களுக்கு மூலிகை தேநீர் வழங்கப்பட்டது.


குறிப்பாக, அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை, நுாலகர்கள் மகேந்திரன், பிரமோத், அஸ்ரப்சித்திகா, பகுதி நேர பணியாளர் ஈஸ்வரி மற்றும் நுாலக வாசகர் வட்ட உறுப்பினர்கள் செய்திருந்தனர்.ஹாம் ரேடியோ கலந்துரையாடல்சாரணர் இயக்கம், உலக அளவிலானஇளைஞர் இயக்கங்களில் ஒன்றாகும். அவ்வகையில், உலகளவில், அலைவரிசைகள் வாயிலாக, சாரண சாரணியர் இயக்க மாணவர்களின்கலைந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டும்வருகிறது.


இதன் வாயிலாக, பல்வேறு பகுதிளைச்சேர்ந்த மாணவர்கள், தங்கள் பகுதிகளில் பின்பற்றப்படும் கலாசார நிகழ்வுகளை பகிர்ந்து கொள்கின்றனர்.அதன்படி, உடுமலை ஆர்.ஜி.எம்., பள்ளியில், மாவட்ட அளவில்ஹாம்ரேடியோ அலைவரிசைக்கான மையம் அமைக்கப்பட்டுள்ளது. உலக அளவிலான கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடந்தது. முன்னதாக, இந்நிகழ்ச்சியை, பள்ளிச்செயலர் நந்தினி, துவக்கி வைத்தார். வெவ்வேறு பள்ளிகளைச்சேர்ந்த மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.அவர்கள், ராஜபாளையம், கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்தஹாம்ரேடியோ மைய மாணவர்களிடம்கலந்துரையாடி மகிழ்ந்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X