மழையால் சில்லுன்னு மாறியது சீதோஷ்ணம்! நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2021
23:07

உடுமலை:பாசன காலத்தில், பெய்து வரும் தொடர் மழையால், உடுமலை பகுதியில், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, கிணற்று பாசன சாகுபடி புத்துயிர் பெறும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.உடுமலை பகுதியில், பிரதானமாக உள்ள விவசாயத்துக்கு, தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகள் முக்கிய ஆதாரமாக உள்ளன.மேலும், திருமூர்த்தி, அமராவதி அணைகளிலிருந்து குறித்த நேரத்தில், தண்ணீர் திறக்கப்படுவதும் பல ஆயிரம் ஏக்கரில், சாகுபடி மேற்கொள்ள முக்கியத்துவம் பெறுகிறது.


நடப்பாண்டு, பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்துக்கு, ஆடிப்பெருக்கு நாளன்று திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது; அமராவதியிலும், நீண்ட இடைவெளிக்குப்பிறகு, குறித்த நேரத்தில், தண்ணீர் திறக்கப்பட்டது.இதனால், மக்காச்சோளம், கரும்பு உட்பட சாகுபடி பணிகள் துவங்கியுள்ள நிலையில், பயிரின் வளர்ச்சித்தருணத்தில், குறிப்பிட்ட இடைவெளியில் மழை பெய்து வருகிறது.


ஏற்கனவே, கால்வாய்களில், பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால், நிலத்தடி நீர் மட்டம் உயரும்; கிணற்றுப்பாசனத்துக்கு, காய்கறி சாகுபடி புத்துயிர் பெறும் என்ற நம்பிக்கையில், விவசாயிகள் உள்ளனர்.நேற்றும் உடுமலை பகுதியில், பகலில், பரவலாக மழை பெய்தது; வெயில் இல்லாமல், குளிர்ந்த சீதோஷ்ண நிலை நாள்முழுவதும் தொடர்ந்தது.


நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி, திருமூர்த்தி அணைப்பகுதியில், 24 மி.மீ., அமராவதி அணை, 12 மி.மீ., நல்லாறு, 16 மி.மீ., பெதப்பம்பட்டி 40 மி.மீ., என்றளவில் மழை பதிவாகியிருந்தது.விவசாயிகள் கூறுகையில்,' அணைகளிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போதைய மழையால், மழை நீர் ஓடைகளில், நீர் வரத்து துவங்கியுள்ளது; விளைநிலங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது'.'எனவே, நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, கிணறு மற்றும் போர்வெல்களில் மட்டம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. வரும் சீசனில், காய்கறி சாகுபடி பரப்பு கூடுதலாகும்,' என்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X