கிடப்பில் குருசடை தீவு சுற்றுலா திட்டம்; எதிர்பார்ப்பில் மக்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2021
23:32

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுலா திட்டத்தின் கீழ் குருசடை தீவு சுற்றுலா திட்டம் கிடப்பில் போடப்பட்டதால், எப்போது செயல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.



மன்னார் வளைகுடா கடலில் 21 குட்டி தீவுகள் உள்ளன. இந்த தீவுகளுக்கு கண்ணாடி இழை படகுகளில் சென்று கடல்வாழ் உயிரினங்களை கண்டு கழிக்கவும், தீவுகளை பார்த்து ரசிக்கவும் வனத்துறை சார்பில் 2019ல் திட்டம் தயாரிக்கப்பட்டது.இங்கு கடல்வாழ் அரிய உயிரினங்கள் அதிகம் வாழ்வதால் மன்னார் வளைகுடா கடல் பகுதியை பாதுகாக்க தேசிய கடல் பூங்கா செயல்படுத்தப்படுகிறது.



பாம்பன் பாலத்தில் இருந்து கடல் அழகையும் குட்டித்தீவுகளையும் ரசிக்கும் சுற்றுலாப் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்ய அவர்களை தீவுகளுக்கு அழைத்து சென்று கடல்வாழ் உயிரினங்களை கண்டு களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இங்குள்ள குருசடை தீவை மையமாக வைத்து, புள்ளிவாசல் தீவு, சிங்கிலிதீவு, பூமரிச்சான் தீவு ஆகிய நான்கு தீவுகள் மற்றும்அதனை சுற்றியுள்ள பகுதிகள் சூழல் சுற்றுலா மையமாக அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்தன.



இதற்கென எல்லைகள்வரையறுக்கப்பட்டு மிதவைகள் போடும் பணி துவங்கியது. இதற்கென பாம்பன் குந்துகால் பகுதியில் ரூ.5 லட்சத்தில் படகு இறங்குதளம் அமைக்கப்பட்டது. ஒரு படகில் 20 பேரை குருசடை தீவில் இறக்கிவிட்டு அங்கிருந்து கண்ணாடி இழை படகில் மற்ற தீவுகளுக்கு அழைத்து செல்ல வசதியாக படகுகளும் வாங்கப்பட்டன.இதற்கென ரூ.40 லட்சம் செலவிடப்பட்ட நிலையில், மீனவர்களின் எதிர்ப்பால் சுற்றுலா திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.



மீனவர்களுடன் உரிய பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களுக்கும், அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் உத்தரவாதம் அளித்து திட்டத்தை செயல்படுத்த வேண்டும், என்பதே மாவட்ட மக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளின் எதிர்பார்ப்பு.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X