முள்ளிமுனையில் ரூ.4.22 கோடியில் கடல் தடுப்பு சுவர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2021
23:35

தொண்டி : தொண்டி அருகே முள்ளிமுனை கடற்கரையில் ரூ.4 கோடியே 22 லட்சத்து 86 ஆயிரம் செலவில் கடல் தடுப்பு சுவர் கட்டப்பட்டது.



மன்னார் வளைகுடா கடலோர பகுதிகளை கடல் அரிப்பிலிருந்து பாதுகாத்திட கடல் தடுப்பு சுவர்கள் கட்ட அரசு உத்தரவிட்டுள்ளது. முள்ளிமுனையில் 535 குடும்பங்கள் உள்ளன. 800க்கும் மேற்பட்டவர்கள் மீன்பிடி தொழில் செய்கின்றனர். மழை, புயல், வெள்ளகாலங்களில் கடலில் ஏற்படக்கூடிய சூறாவளியால் கடல் அரிப்பு ஏற்பட்டு 150 மீட்டர் நீளமுள்ள கடற்கரை சாலை முற்றிலும்சேதமடைந்தது.



கடந்த 10 ஆண்டுகளில் 30 மீட்டர் நிலப்பரப்பில் கடல் நீர் புகுந்தது. வரும் காலங்களில் கடல் நீர் கிராமத்திற்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.சட்டசபையில் 2019-20ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் இத் திட்டத்தை செயல்படுத்த அரசு உத்தரவிட்டது. அதன்படி ரூ. 4 கோடியே 22 லட்சத்து 86 ஆயிரம் ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் ஒரு ஆண்டிற்கு முன்பு துவங்கியது. கற்கள் கடற்கரை ஓரத்தில் அடுக்கி வைக்கபட்டுள்ளது.



இதுகுறித்து பொதுப்பணித்துறை அலுவலர்கள் கூறியதாவது:இப்பகுதியில் கடல் நீர் உட்புகும் அபாயம் ஏற்பட்டதால் கடல் தடுப்பு சுவர் கட்டும் திட்டம் செயல்படுத்தபட்டது. காரங்காடு, பாசிபட்டினம் உள்ளிட்ட பல கிராம மக்கள் தடுப்பு சுவர் கட்டவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.அரசு நிதி ஒதுக்கீட்டிற்கு பின் திட்டம் செயல்படுத்தப்படும், என்றனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X