பள்ளிக்குழந்தைகளுக்கு சிறுநீர்த்தொற்று அபாயம்: தனித்தனி இடைவேளை விட்டு தவிர்க்க ஆலோசனை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

18 அக்
2021
01:52
பதிவு செய்த நாள்
அக் 18,2021 01:29

கோவை:''வகுப்பு வாரியாக பிரித்து பள்ளிக்குழந்தைகளுக்கு தனித்தனியாக இடைவேளை விடுவதன் மூலம் அவர்களுக்கு சிறுநீர்த்தொற்று ஏற்படுவதை தவிர்க்க முடியும்,'' என்று, கோவை டாக்டர் குமாரசாமி கூறினார்.



தமிழக அரசு நவ.,1 முதல் பள்ளிகளை திறக்க உத்தேசித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு, முதல் முறையாக இப்போது தான் குழந்தைகளுக்கான வகுப்புகள் திறக்கப்பட உள்ளன.இந்த சூழலில் குழந்தைகள் நலன் கருதி, பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர், பெற்றோர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து, கோவை டாக்டர் குமாரசாமி கூறியதாவது:



* குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர், சானிடைசர் பயன்படுத்துவது பற்றியும், சுத்தம் பற்றியும் தெளிவாக சொல்லிக்கொடுத்து அனுப்ப வேண்டும்.n வீட்டில் இருந்து மாஸ்க் அணிவித்து அனுப்பினாலும், கூடுதலாக கர்ச்சீப் அல்லது துணி கையில் கொடுத்து அனுப்ப வேண்டும். குறைந்தது 2 துணி குழந்தைகளிடம் வேண்டும். ஒன்று கர்ச்சீப் ஆகவும், இன்னொன்று உட்காரும் இடத்தை சுத்தம் செய்யவும் பயன்படுத்தலாம்.



* பள்ளியில் இடைவேளை விடும்போது, பல நுாறு குழந்தைகள் ஒரே நேரத்தில் கழிப்பிடத்துக்கு செல்வர். அனைவருக்கும் போதிய அளவில் கழிப்பிடங்கள் அரசு பள்ளிகளில் இருக்காது. எனவே, 1, 2, 3 என சிறு வகுப்பு குழந்தைகளுக்கு முதலில் முன்னுரிமை அளித்து இடைவேளை விட வேண்டும்.



* அவர்களது இடைவேளை முடிந்தவுடன், 4 மற்றும் 5ம் வகுப்புகளுக்கும், அடுத்த இடைவேளை, 6, 7, 8ம் வகுப்புகளுக்கும் விடலாம். இப்படி பிரித்து பிரித்து தனித்தனியாக இடைவேளை விடுவது குழந்தைகளுக்கும் வசதியானது; கழிப்பிடம் சுத்தம் செய்வதற்கும் ஏற்றது.



* மாறாக, அனைத்து குழந்தைகளும் ஒரே நேரத்தில் முண்டியடித்துக் கொண்டு கழிப்பறைக்குள் செல்வதால் நோய்த்தொற்று பரவும் வாய்ப்பு அதிகம். இதை புரிந்து கொண்டு தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் பள்ளி இடைவேளையை தனித்தனியாக பிரிக்க வேண்டும்.



* வீட்டில் இருந்து பள்ளிக்கு குழந்தை புறப்படும்போதே, சிறுநீர் கழித்து விட்டு செல்வதை பெற்றோரும் உறுதி செய்ய வேண்டும்.



* சிறுநீர் என்பது கழிவு. அதை நீண்ட நேரம் அடக்கி வைத்திருப்பதால் கிருமிகள் சிறுநீர்ப்பையில் தேக்கம் அடையும். அப்படி தேங்கும்போது காய்ச்சல், குளிர், சிறுநீர்த்தொற்று ஏற்படும். குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.



எனவே, குழந்தைகள் தண்ணீர் போதிய அளவு குடிக்க வேண்டும். சிறுநீர் கழிக்காமல் இருப்பது கூடாது. சிறுநீர் கழித்த இடத்தை சுத்தம் செய்து வர வேண்டும் என்பதை, குழந்தைகளிடம் பெற்றோரும், ஆசிரியர்களும் பழக்கப்படுத்த வேண்டும்.இவ்வாறு, டாக்டர் குமாரசாமி கூறினார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X