வழியா... வலியா... துவங்கியாச்சு பண்டிகை நெரிசல்: இப்பவே கண்ணைக் கட்டுதே! திக்குமுக்காடுது வாகனங்கள்; பொதுமக்கள் திணறல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

18 அக்
2021
02:28
பதிவு செய்த நாள்
அக் 18,2021 02:27

திருப்பூர்:தீபாவளி நெருங்கும் நிலையில், திருப்பூர் பிரதான சாலைகளில், தற்போதே, போக்குவரத்து நெரிசல் கடுமையாகியுள்ளது; வாகனங்கள் ஊர்ந்துதான் செல்ல வேண்டியுள்ளது.

தீபாவளியையொட்டி போலீசார் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள போக்குவரத்து மாற்றத்திற்கு, பயணிகள் ஒருதரப்பினரிடம் எதிர்ப்பு எழுந்துள்ளது.நவ., 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. திருப்பூரில் தற்பாதே பிரதான வீதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. தீபாவளியையொட்டி, போக்குவரத்து மாற்றம் செய்து, மாநகர போலீஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு சிரமம்பயணிகள் கூறியதாவது:திருச்சி, தஞ்சாவூரில் வரும் பஸ்கள், முதலிபாளையத்தில் இருந்து பெருந்தொழுவு வழியாக கோவில்வழி வர வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை நல்லுார், முத்தணம்பாளையம், செவந்தாம்பாளையம் வழியாக கோவில்வழிக்கு வந்தால் கூட பரவாயில்லை.நகருக்கு, 11 கி.மீ., முன்பே முதலிபாளையத்தில் பஸ்சை திருப்பி, பெருந்தொழுவு ரோட்டில் 9 கி.மீ., பயணித்து, பின் கோவில்வழி வர வேண்டியுள்ளது. மொத்தம், 20 கி.மீ., சுற்ற வேண்டும்.

முதலிபாளையத்தில் இருந்து நகருக்குள் புகுந்து, புதிய பஸ் ஸ்டாண்ட் வந்தாலே, பஸ் 12 கி.மீ., தான் பயணிக்கும்.இதுவரை சேலம், திருவண்ணாமலை பஸ்கள் எங்கும் நெரிசலில் சிக்காமல் ஊத்துக்குளி ரோட்டில்(தொடர்ச்சி 3ம் பக்கம்)

போலீஸ் கமிஷனர் பேட்டிதிருப்பூர் போலீஸ் கமிஷனர் வனிதா கூறியதாவது:மாநகரில் போக்குவரத்து மாற்றம் என்பது, போக்குவரத்து நெரிசல் மற்றும் கூட்டத்தை பொறுத்து, ஒரு வழிப்பாதை, வழிதடம் மாற்றம் உள்ளிட்டவற்றை அந்த நேரத்திற்கேற்ப மாற்றப்படும்.

புதிய பஸ் ஸ்டாண்டுக்கு வரும் பஸ்கள், கோவில் வழிக்கு மாற்றப்படுவது தற்போது கிடையாது. தீபாவளிக்கு சிறப்புகள் பஸ்கள் எண்ணிக்கை விபரம் கிடைத்த பின், கோவில் வழிக்கு மாற்றலாம் என்று ஆலோசித்துள்ளோம். போக்குவரத்து நெரிசல் இல்லாமல், குறைந்த துாரம் உள்ளிட்டவற்றை கணக்கில் வைத்து, வழித்தடம் மாற்றம் திட்டமிட்டுள்ளோம்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-அக்-202116:19:44 IST Report Abuse
சம்பத் குமார் 1). வந்தாரை வாழ வைக்கும் திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்கள்.2). மத்திய அரசாங்கம் RoSCTL Shemeயை Garments and textile exporterக்கு வரும் 2024 வரைக்கும் extension செய்துள்ளது.இது திருப்பூர் மற்றும் டெக்ஸ்டைல் தொழிலில் பல புதிய ஆர்டர்கள் கிடைக்க வழிவகை செய்து உள்ளது.3). நண்பர் சொன்னது போன்று இந்த ஜப்பசி மாதம் முழுவதும் இரவு பகல் என கடை இந்த ஏரியாவில் திறந்து இருந்தால் நல்ல வியாபாரம் நடைபெறும். நன்றி ஐயா. ஹரி ஓம்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
18-அக்-202109:32:03 IST Report Abuse
duruvasar விடியலின் நீழ்ச்சியை காண சகிக்காதவர்களின் புலம்பல். ஸ்டாலின் தான் வந்துட்டாரு . . . . . . . . . .
Rate this:
Cancel
18-அக்-202106:16:14 IST Report Abuse
சந்திரசேகர் இந்த மாதம் கடைகளை 24மணி நேரம் திறக்க அனுமதிக்கலாம்.இதன் மூலம் மக்கள் தங்கள் சவுகரியத்திற்கு தகுந்த நேரத்தில் துணி மற்றும் இதர பொருட்களை வாங்கி கொள்ள முடியும்.இதன் மூலம் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X