மாமல்லை சிற்பங்களை ரசித்த அமெரிக்க கடற்படை வீரர்கள் | காஞ்சிபுரம் செய்திகள் | Dinamalar
மாமல்லை சிற்பங்களை ரசித்த அமெரிக்க கடற்படை வீரர்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 அக்
2021
03:57

மாமல்லபுரம் : மலபார் கூட்டு போர் பயிற்சிக்காக இந்தியா வந்துள்ள, அமெரிக்க கடற்படைவீரர்கள், மாமல்லபுரம்தொல்லியல் சிற்பங்களை நேற்று கண்டு ரசித்தனர்.



ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் பகுதியில், மலபார் கூட்டு போர் பயிற்சி சமீபத்தில் நடந்தது. விமானம் தாங்கி போர் கப்பல்களுடன், இந்திய கடற்படை வீரர்களுடன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் கடற்படை வீரர்கள், இப்பயிற்சியில் ஈடுபட்டனர்.இதில் பங்கேற்ற அமெரிக்க கடற்படை வீரர்கள் நேற்று, மாமல்லபுரம் சுற்றுலா வந்தனர்.பல்லவர் கால கடற்கரை கோவில் உள்ளிட்ட, தொல்லியல் சின்னங்களை கண்டு ரசித்தனர். பல்லவர் ஆட்சி, சிற்பங்களின் சரித்திர பின்னணி குறித்து, சுற்றுலா வழிகாட்டி விளக்கியதை கேட்டு வியந்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X