மழை நீரால் நிரம்பியது ஏரி கிராமத்தில் மகிழ்ச்சி வெள்ளம் | திருவள்ளூர் செய்திகள் | Dinamalar
மழை நீரால் நிரம்பியது ஏரி கிராமத்தில் மகிழ்ச்சி வெள்ளம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 அக்
2021
03:59

ஆர்.கே.பேட்டை : அம்மையார்குப்பம் ஏரி முழு கொள்ளளவை எட்டிய நிலையில், கலங்கல் வழியாக, உபரி நீர் வெளியேறி வருகிறது.



இதனால், கிராம மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்து வருகின்றனர்.ஆர்.கே.பேட்டை அடுத்த, அம்மையார்குப்பம் ஏரிக்கு, ஆந்திர மாநிலத்தில் இருந்து நீர் வரத்து உள்ளது. சில நாட்களாக நீர் வரத்து துவங்கிய நிலையில், நேற்று முன்தினம் இரவு, முழு கொள்ளளவை எட்டிய நிலையில், கலங்கல் வழியாக உபரி நீர் வெளியேற துவங்கியது.ஏரி நிரம்பியதால், கிராமத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொகுதி எம்.எல்.ஏ., சந்திரன் நேற்று காலை அம்மையார்குப்பம் ஏரியை பார்வையிட்டார்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X