போலீஸ் டைரி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2021
04:03

மின்னல் தாக்கி பெண் பலி


நகரி: சித்துார் மாவட்டம், பலமநேர் பகுதியில், போடிரெட்டிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் நேத்திராவதி, 30. இவர், நேற்று முன்தினம் வீட்டு அருகே வாசல் பெருக்கிக் கொண்டிருந்தார்.அப்போது திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில், மின்னல் தாக்கியதில் நேத்திராவதி பலத்த தீக்காயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக பலமநேர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே இறந்தார். மேலும், மின்னல் தாக்கியதில் வீட்டின் அருகே கட்டியிருந்த பசு மாடு ஒன்றும் இறந்தன.



கால்வாயில் தவறி விழுந்தவர் பலி



நகரி: சித்துார் மாவட்டம், கார்வேட்நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரகு, 35. இவர், திருப்பதி விநாயகர் நகரில் உள்ள, மாமனார் வீட்டில் குடும்பத்துடன் தங்கியிருந்தார்.



இந்நிலையில், நேற்று முன்தினம், ரகு வீட்டில்இருந்து வெளியே சென்று மது குடித்து விட்டு, வீட்டிற்கு போதையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது வீட்டின் அருகே செல்லும் கழிவு நீர் கால்வாயில் தவறி விழுந்து இறந்தார். திருப்பதி போலீசார் விசாரிக்கின்றனர்.நீரில் மூழ்கி வாலிபர் பலிநகரி: சித்துார் மாவட்டம், சோமலா அடுத்த, நஞ்சம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் வினோத் குமார், 22.இவர், நேற்று முன்தினம், நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள தளவாய்ஏரியில் இருந்து, கடைவாசல் கால்வாயை கடக்க முயன்றார்.



அப்போது கால் தவறி கால்வாயில் விழுந்ததில் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதையடுத்து, சோமலா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கால்வாயில் இறங்கி, வினோத்குமாரை பிணமாக மீட்டனர். சோமலா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.



ரேஷன் அரிசி பறிமுதல்



திருத்தணி: ஆந்திராவிற்கு கடத்திய, 7 டன் தமிழக ரேஷன் அரிசி மூட்டைகளை வேனுடன் போலீசார் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர்.



திருவாலங்காடு ஒன்றியம், கனகம்மாசத்திரம் பகுதியில் இருந்து, ஆந்திர மாநிலத்திற்கு தமிழக ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, கனகம்மாசத்திரம் போலீசார் நேற்று, அதிகாலை, ராமஞ்சேரி பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனை நடத்தினர்.அப்போது, அவ்வழியாக வந்த 407 மாடல் வேனைபோலீசார் மடக்கி சோதனை செய்தனர்.வேனில், 7 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.



மேலும், வேன் ஓட்டுனர், ஆந்திர மாநிலம், சத்தியவேடுவைச் சேர்ந்த தினேஷ், 24, என்பவரை கைது செய்தனர்.



வாலிபர் தற்கொலை



செங்கல்பட்டு: ஆத்துாரில், குடும்பத் தகராறில், வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.செங்கல்பட்டு அடுத்த, ஆத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன், 41. இவருக்கு, மனைவி, மகன், மகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக, தம்பதிக்குள் அடிக்கடி குடும்ப பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.



இதனால், மனமுடைந்து, குடிபோதையில் இருந்த அவர், நேற்று, தன் கழுத்தை அறுத்துக் கொண்டு, ரத்த வெள்ளத்தில் மயங்கி, விழுந்து, சம்பவ இடத்திலேயே இறந்தார்.போலீசார், சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு, அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.



ஏரியில் விழுந்தவர் பலி



ஆர்.கே.பேட்டை: ஏரிக்கரையில் நின்று போட்டோ எடுத்தவர், தவறி தண்ணீரில் விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே இறந்தார்.



ஆர்.கே.பேட்டை அடுத்த, அய்யனேரி ஏரி முழுதுமாக நிரம்பியுள்ளது. கலங்கலில் உபரி நீர் வெளியேறி வருகிறது. இதை காண ஏராளமானோர் அந்த பகுதியில் குவிந்து வருகின்றனர்.நேற்று மாலை, வீராணத்துார் காலனியைச் சேர்ந்த சகாதேவன் மகன் சிவா, 45, என்பவர், ஏரிக்கரையில் நின்று போட்டோ எடுத்துக் கொள்ள முயற்சித்தார்.அப்போது நிலை தடுமாறி தண்ணீரில் விழுந்தார். உடன் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.



இது குறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.மின்னல் தாக்கி 16 ஆடுகள் பலிநகரி: நகரி அருகே மின்னல் தாக்கியதில், ஆட்டுக் கொட்டகையில் இருந்த 16 செம்மறி ஆடுகள் இறந்தன.சித்துார் மாவட்டம் நகரி அடுத்த காக்கவேடு மிட்டகண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசந்திரா, 35; விவசாயி. இவர் 16 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார்.



இந்நிலையில், நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு ஆடுகளை ஓட்டிச் சென்றார். பின், மாலையில் வீட்டிற்கு ஓட்டி வந்த ஆடுகளை ஆட்டுக் கொட்டகையில் அடைத்துவிட்டு துாங்கச் சென்றார்.



நள்ளிரவில் திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில், ஜெயசந்திரா ஆட்டுக் கொட்டகையை மின்னல் தாக்கியது. அங்கிருந்த 16 செம்மறி ஆடுகள் மின்னல் தாக்கியதில் இறந்தன.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X