ஊராட்சி மன்ற கட்டடங்களுக்கு சுண்ணாம்பு அடிக்கும் பணி | காஞ்சிபுரம் செய்திகள் | Dinamalar
ஊராட்சி மன்ற கட்டடங்களுக்கு சுண்ணாம்பு அடிக்கும் பணி
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 அக்
2021
04:04

வாலாஜாபாத் : புதிய ஊராட்சி தலைவர்கள் பதவி ஏற்க இருப்பதால், ஊராட்சி மன்ற பழைய கட்டடங்களுக்கு சுண்ணாம்பு அடிக்கும் பணியை, உள்ளாட்சி நிர்வாகங்கள் துவக்கி உள்ளன.



காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்தில் 61 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு 302 பேர் போட்டியிட்டனர்.இதில் 61 ஊராட்சி தலைவர்கள் வெற்றி பெற்று உள்ளனர். இவர்களுக்கு அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 20ம் தேதி காலை பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளனர்.ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கும் அதே தினத்தில் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளனர்.இதில் 22ம் தேதி, துணை தலைவருக்கு உரிய மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பதவி பிரமாணத்திற்காக, ஊராட்சி மன்ற கட்டடங்களுக்கு சுண்ணாம்பு அடிக்கும் பணி துவக்கப்பட்டு உள்ளது.குறிப்பாக, முத்தியால்பேட்டை உள்ளிட்ட பழைய ஊராட்சி மன்ற கட்டடங்களுக்கு சுண்ணாம்பு அடித்து, ஊராட்சி தலைவர் பதவி பிரமாணத்திற்கு உரிய ஏற்பாடுகளை, ஊராட்சி நிர்வாகங்கள் தீவிரமாக செய்து வருகின்றன.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X