தடுப்புச்சுவர் இன்றி தரைப்பாலம் | திருவள்ளூர் செய்திகள் | Dinamalar
தடுப்புச்சுவர் இன்றி தரைப்பாலம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 அக்
2021
04:04

பொன்னேரி : மழை நீர் செல்லும் கால்வாயின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தில் தடுப்பு சுவர் இல்லாததால், வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர்.



பொன்னேரி அடுத்த, ஆசானபூதுார் கிராமத்தில் இருந்து வீரங்கிமேடு, பெரும்பேடு செல்லும் சாலையில் மழை நீர் செல்லும் கால்வாயின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது.விளை நிலங்களுக்கு இடுபொருட்களை கொண்டு செல்லும் விவசாயிகளும், மடிமைகண்டிகை, வீரங்கிமேடு, ஏருசிவன் ஆகிய கிராமமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மெதுார் செல்லவும் இந்த தரைப்பாலத்தை கடந்து செல்கின்றனர்.தரைப்பாலத்தின் இருபுறமும் தடுப்பு சுவர் இன்றி இருப்பதால், எதிர் எதிரே வாகனங்கள் வரும்போது தடுமாற்றம் அடைகின்றனர்.இரவு நேரங்களில் இப்பகுதி இருண்டு இருப்பதால், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கால்வாயில் விழுந்து விபத்துகளில் சிக்கும் வாய்ப்பு உள்ளது.மேலும், மேற்கண்ட தரைப்பாலம் முழுதும் சரளை கற்களும் பெயர்ந்து இருக்கின்றன. தரைப்பாலத்தின் இருபுறமும் தடுப்பு சுவர் அல்லது இரும்பு தடுப்புகள் அமைக்கவும், சரளை கற்களை அகற்றி, பாலத்தின் மேற்பகுதியை சீரமைக்கவும் வேண்டும் என, கிராமவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X