ஒரே பெயர் போட்டி வேட்பாளர்கள் வாக்காளர்கள் சமயோசித புறக்கணிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2021
04:06

மாமல்லபுரம் : திருக்கழுக்குன்றம் ஒன்றிய ஊராட்சி பகுதிகளில், எதிர் வேட்பாளரை தோற்கடிக்க, ஒரே பெயரில் போட்டிக்கு களமிறக்கப்பட்டவர்களை, வாக்காளர்கள் சமயோசிதமாக புறக்கணித்து உள்ளனர்.



தோற்கடிக்க முயற்சிதேர்தலில், பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள், பிற போட்டி கட்சியின் ஓட்டுகளை பிரித்து, அக்கட்சி வேட்பாளரை தோற்கடிக்க முயற்சிப்பர்.இத்தகைய முயற்சியாக, போட்டி வேட்பாளர் பெயர் கொண்ட நபரை சுயேச்சையாக களமிறக்குவர். இம்முயற்சி, சிலருக்கு வெற்றியையும் அளித்துள்ளது.அரசியல் கட்சி வேட்பாளர் பெயரில், பல சுயேச்சைகள் இருப்பினும், வாக்காளர்கள் கட்சி சின்னத்தை கவனித்தே ஓட்டளிப்பர்.ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு, சுயேச்சை சின்னத்தில் மட்டுமே போட்டியிட முடியும்.



பிரதான வேட்பாளர்கள், போட்டியாளரை தோற்கடிக்க, அவர் பெயர் கொண்டவரை வேட்பாளராக களமிறக்குவர்.அனைவருமே சுயேச்சை என்பதால், வாக்காளர், தாம் விரும்பும் வேட்பாளரின் சின்னத்தை கவனித்தே ஓட்டளிப்பர்.திருக்கழுக்குன்றம் ஒன்றிய பகுதியில், போட்டி வேட்பாளர் பெயரில் களமிறக்கப்பட்டவர்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர்.



கல்பாக்கம் - புதுப்பட்டினம் ஊராட்சி தலைவராக வென்றவர், திருப்போரூர் அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., மற்றும் வாயலுார் பகுதி ஒன்றிய கவுன்சிலராக வென்ற தனபால் மனைவி காயத்ரி. இவர் 5,219 ஓட்டுகள் பெற்றார். 1,419 ஓட்டுகள்இவரை தோற்கடிக்க, மற்றொரு காயத்ரி நிறுத்தப்பட்டு, அவர் 122 ஓட்டுகளே பெற்றார்.அணுபுரம் - நெய்குப்பி ஊராட்சி தலைவராக, 1,419 ஓட்டுகள் பெற்று வென்றவர், த.அர்ஜுனன். இவரை தோற்கடிக்க நிறுத்தப்பட்ட சு.அர்ஜுனன், 358 ஓட்டுகளே பெற்றார். வாக்காளர்களை சாதாரணமாக கருதி, ஒரே பெயரில் களமிறக்கப்பட்டவர்களை, சமயோசிதமாக புறக்கணித்துள்ளனர்.

 

Advertisement
மேலும் செங்கல்பட்டு மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X