கல்வெட்டு நிறைந்த எழுத்து கற்கள்  தொல்லியல் துறை பாதுகாக்க வேண்டும் 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2021
04:09

வாலாஜாபாத் : கல்வெட்டு எழுத்துகள் நிறைந்த கற்களை மீட்டு பாதுகாக்க வேண்டும் என, வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை வைத்துஉள்ளனர்.



வாலாஜாபாத் அடுத்த பழையசீவரம் கிராமத்தில், 6 அடி உயரத்தில் கந்தபாலீஸ்வரர் என அழைக்கப்படும், நின்ற நிலையிலான சிவன் சிலை ஒன்று சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.அதன் அருகே, பல நுாற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு எழுத்துகள் நிறைந்த கற்கள் கேட்பாரற்று இருந்தன. அதை, தொல்லியல் துறையினர் மீட்டு பாதுகாக்க வேண்டும் என, வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.இது குறித்து, உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவை ஆதன் கூறியதாவது:பழையசீவரம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், 11ம் நுாற்றாண்டைச் சேர்ந்த முதலாம் குலோத்துங்க சோழன் கல்வெட்டு உள்ளது.இதில், பழையசீவரம் கிராமம் 'சீயபுரம்' என அழைக்கப்பட்டு இருந்தது. இது, பிற்காலத்தில் மருவி, பழையசீவரம் என அழைக்கப்படுகிறது.



இது தவிர, 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டும் உள்ளது. மேலும், இந்த கோவில் அருகே, கல்வெட்டு எழுத்துகள் நிறைந்த குமுதப்பட்டை கற்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன.இந்த கல்வெட்டு எழுத்துகளின் அமைப்பை பார்க்கும் போது, 1,000 ஆண்டு களுக்கு முந்தையது எனக் கூறலாம். கந்தபாலீஸ்வரர் கோவிலின் கட்டுமானத்திற்குரிய கற்களாக இருப்பதற்கு, நிறைய வாய்ப்பு இருக்கிறது.தற்போது இது, பழையசீவரம் மேலண்டை ராஜவீதியில், கேட்பாரற்று சாலை ஓரமாக உள்ளது. இந்த கல்வெட்டு எழுத்துகளை கொண்ட கற்களை, சம்பந்தப்பட்ட தொல்லியல் துறையினர் மீட்டு பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X