கார் கண்ணாடியை உடைத்து திருட்டு | சென்னை செய்திகள் | Dinamalar
கார் கண்ணாடியை உடைத்து திருட்டு
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 அக்
2021
04:25

கானத்துார் : பனையூரில், கார் கண்ணாடியை உடைத்து, 4 கிலோ வெள்ளி பொருட்கள் திருடிய மர்ம நபர்களை, போலீசார் தேடுகின்றனர்.



புதுச்சேரியைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 35. அங்குள்ள, ஒரு நகைக்கடையில் பணிபுரிகிறார். சென்னை, பாரிமுனையில் இருந்து, வெள்ளி பொருட்கள் வாங்கி செல்வது வழக்கம்.நேற்று, 30 கிலோ வெள்ளி பொருட்கள் வாங்கிக் கொண்டு, பாரிமுனையில் இருந்து புதுச்சேரிக்கு காரில் கிளம்பினார். காரை, மணிகண்டன் 30, என்பவர் ஓட்டினார்.மதியம், கிழக்கு கடற்கரை சாலை பனையூரில், காரை சாலையோரம் நிறுத்தி, இருவரும் ஒரு ஓட்டலில் சாப்பிட சென்றனர். இவர்களை பின்தொடர்ந்து காரில் வந்த மர்ம நபர்கள், கார் கண்ணாடியை உடைத்து, 4 கிலோ வெள்ளி பொருட்களை திருடினர். தடுக்க முயன்ற மணிகண்டனை, கத்தியைக் காட்டி மிரட்டி தப்பினர்.புகாரின்படி, கானத்துார் போலீசார் மர்ம நபர்களை தேடுகின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X