குப்பையில் கிடந்த 100 கிராம் தங்க நாணயம் ஒப்படைப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2021
04:33

திருவொற்றியூர் : குப்பையில் கிடந்த, 100 கிராம் தங்க நாணயத்தை, போலீசாரிடம் ஒப்படைத்த துாய்மை பணியாளர்களுக்கு, போலீசார், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.



சென்னை, திருவொற்றியூர், அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் கணேஷ் ராமன், 36. தனியார் கூரியர் நிறுவன ஊழியர். அவர் மனைவி, ஷோபனா, 34. இந்த தம்பதிக்கு, இரு பிள்ளைகள் உள்ளனர்.கணேஷ், மார்ச் மாதம், 100 கிராம் எடையுள்ள தங்க நாணயத்தை வாங்கி, மனைவி பயன்படுத்திய பழைய வளையல் கவரில் போட்டு, கட்டிலுக்கு அடியில் வைத்திருந்தார்.இது தெரியாத மனைவி, நேற்று முன்தினம் மாலை, வீட்டை சுத்தம் செய்த போது, அந்த கவரை எடுத்து, குப்பைத் தொட்டியில் போட்டு விட்டார்.வீட்டிற்கு வந்த கணவர், வளையல் கவரை கேட்ட போது, குப்பை தொட்டியில் போட்டதாக கூறியதும் அதிர்ச்சியடைந்தவர், சாத்தாங்காடு காவல் நிலையத்தில், தங்க நாணயம் மாயமானது குறித்து புகார் அளித்தார்.



இது குறித்து, துாய்மை பணி மேற்கொள்ளும் ராம்கி, தனியார் ஒப்பந்த நிறுவன மேற்பார்வையாளர் செந்தமிழ் செல்வனிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, குப்பை தரம்பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மேரி என்ற ஊழியர், தங்க நாணயத்தை மீட்டு, மேற்பார்வையாளரிடம் ஒப்படைத்துள்ளார்.துாய்மை பணி அதிகாரிகள், தங்க நாணயத்தை சாத்தாங்காடு குற்றப்பிரிவு ஆய்வாளர் ராஜேஷ்வரியிடம் ஒப்படைத்தனர். இதன் மதிப்பு, 4.5 லட்சம் ரூபாய் என தெரிகிறது.உடனடியாக பாதிக்கப்பட்ட நபர்களை வரவழைத்து, தங்க நாணயத்தை சரி பார்த்த பின், அதை பத்திரமாக மீட்டு கொடுத்த துாய்மை பணியாளர்கள் கையாலே தம்பதியிடம், நேற்று மதியம், போலீசார் வழங்க செய்தனர்.



குப்பையில் கிடந்த, 100 கிராம் தங்க நாணயத்தை மீட்டு, போலீசாரிடம் நேர்மையாக ஒப்படைத்த, துாய்மை பணியாளர்களுக்கு, தங்கத்தின் உரிமையாளர்கள், போலீசார், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-அக்-202116:27:08 IST Report Abuse
சம்பத் குமார் 1). தர்மம் சத்யம் நேர்மை இந்த உலகத்தில் எவராவது ஒருவர் உருவத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியே அதற்கு அத்தாட்சி. 2). குலம் ஆலமரம் போல் செழித்து வளரட்டும்.2). வறுமையிலும் நேர்மை தர்மம் சத்யம் பிறர் பொருளுக்கு ஆசை படாமல் வாழ்வது இறைவாழ்கை வாழ்வதற்கு ஒத்ததாகும். 3). அவர்களது பெற்றோர்களை பாராட்ட வேண்டும். நன்றி ஐயா.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
18-அக்-202107:53:12 IST Report Abuse
Lion Drsekar பாராட்டுக்கள் இவர்கள் நேர்மையை இவ்வுலகுக்கு காட்டிய அதே நேரத்தில் அவர்களது செய்தியை புகைப்படத்துடன் வெளியிட்டு அந்த குடும்பத்துக்கு ஒரு பொக்கிஷமாக திகழும் தினமலருக்கு பாராட்டுக்கள், வாசகர்களுக்கு இது ஒரு செய்தி ஆனால் அந்த அந்த செய்திகளின் பின்னணியில் இருப்பவர்களுக்கு அவர்கள் குடும்பத்துக்கு ஒரு ஆவணம், நேர்மையாக செய்லபடுவோர்கள் ஆயராக இருந்தாலும் தேடி கண்டுபிடித்து செய்தி வெளியிடும் தினமலருக்கு பாராட்டுக்கள், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X