இளம் பெண்ணிடம் சில்மிஷம் செய்ய முயன்றவருக்கு வலை | செய்திகள் | Dinamalar
இளம் பெண்ணிடம் சில்மிஷம் செய்ய முயன்றவருக்கு வலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 அக்
2021
05:05

திருக்கனுார் : கொடாத்துாரில் இளம் பெண்ணின் கையை பிடித்து சில்மிஷத்தில் ஈடுபட முயன்றவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



திருக்கனுார் அடுத்த கொடாத்துார் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் மூர்த்திராஜா. புதுச்சேரியில் தனியார் கம்பெனியில் வேலை செய்யும் 20 வயது பெண், கடந்த 15ம் தேதி இரவு வேலை முடிந்து பஸ்சில் கொடாத்துார் வந்தார்.வீட்டிற்கு நடந்து சென்ற அப்பெண்ணை, மூர்த்திராஜா வழிமறித்து தகராறில் ஈடுபட்டதுடன், கையை பிடித்து சில்மிஷம் செய்ய முயன்றுள்ளார்.அப்பெண் சத்தம் போட்டதால், மூர்த்திராஜா தப்பி ஓடி விட்டார்.புகாரின் பேரில் திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X