புதுச்சேரி : கவிஞர் கண்ணதாசனின் 40ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.கவிஞர் கண்ணதாசன் இலக்கியக் கழகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவரது உருவப்படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது
.கண்ணதாசன் இலக்கியக் கழகத் தலைவர் பொறியாளர் தேவதாசு தலைமை தாங்கினார். நிறுவனர் கோவிந்தராசு முன்னிலை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக கீதநாதன் பங்கேற்றார்.அருள்செல்வம, தமிழ்நெஞ்சன், சுகுமாரன், கஜேந் திரன் ,திருநாவுக்கரசு உட்பட பலர் பங்கேற்று கண்ணதாசன் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.