போலீஸ் செய்திகள்//
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2021
05:29

வெள்ளைத்திரி பறிமுதல்



சாத்துார்: வெம்பக்கோட்டை எஸ்.ஐ., ராமமூர்த்தி தலைமையில் போலீசார் ரோந்து சென்ற போது விஜயகரிசல்குளம் சங்கரலிங்கம் வீட்டின் அருகில் வி.மீனாட்சிபுரத்தை சேர்ந்த குருநாதன் 30, அரசு அனுமதியின்றி 50 குரோஸ் வெள்ளைத்திரி வைத்திருந்தது தெரிந்தது. வெம்பக்கோட்டை போலீசார் திரியை பறிமுதல் செய்து குருநாதனை தேடுகின்றனர்.



பெண் மீது தாக்குதல்



சிவகாசி: ரங்கபாளையம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கலங்காண்டியம்மாள் 50 . இவருக்கும் இவரது உறவினரான பரமகுரு என்பவருக்கும் சொத்து தகராறில் முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் பரமகுரு, இவரது மகன் ஞானகுரு, மனைவி முத்து ஆகியோர் கலங்காண்டியம்மாளை அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர். எம்.புதுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.



சரவெடி பறிமுதல்



சாத்துார்: வெம்பக்கோட்டை எஸ்.ஐ.,க்கள் ராமமூர்த்தி, வேலுச்சாமி தலைமையிலான போலீசார் ரோந்து சென்ற போது விஜயகரிசல்குளம் கணேசன் வீட்டிற்கு அருகில் இறவார்பட்டி முருகேசன் 59, சரவெடி 30 கிலோ வைத்திருந்தார். இதே போல் அயன் சல்வார் பட்டியில் காளியம்மன் கோயில்தெருவில் மாரியப்பன் 30, வீட்டில் 30 கிலோ சரவெடி, இறவார் பட்டி அய்யனார் 29, வீட்டில் 10 கிலோ சரவெடி இருப்பது தெரிந்தது. போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய மூவரை வெம்பக்கோட்டை போலீசார் தேடுகின்றனர்.



விபத்தில் ஒருவர் பலி



சிவகாசி: சாத்துார் ஒத்தையால் கிராமத்தை சேர்ந்தவர் விமலாரோஸ் 48. சிவகாசி பைபாஸ்சில் சிக்கன் ரைஸ் கடை வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் தனது மகன் நாகராஜ் 21, உடன் டூ வீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) சாத்துார் சென்றபோது போது முன்னால் சென்ற லோடு வேன் மீது மோதியது. நாகராஜ் இறந்தார். விமலாரோஸ் காயமடைந்தார். லோடு வேன் டிரைவர் மணிகண்டனை சிவகாசி கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.



மதுவிற்ற மூவர் கைது



விருதுநகர்: விருதுநகர் எம்.ஜி.ஆர்., சிலை அருகே மது விற்றுக் கொண்டிருந்த மூவரை பஜார் எஸ்.ஐ.,ரமேஷ் தலைமையிலான போலீசார் பிடித்தனர். இதில் கர்ணன் 22, சுந்தரபோஸ் 30, ராமச்சந்திரன் 56 ஆகிய மூவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 158 மதுபாட்டில்களும், ரூ.18 ஆயிரத்து 170 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.



பஸ்சில் சென்றவரிடம் பணம் பறிப்பு



விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்துார் அப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பூமாதேவி 47. விருதுநகரில் உள்ள அம்மா வீட்டிற்கு வந்துவிட்டு ஊருக்கு திரும்புவதற்காக ராஜபாளையம் பஸ்சில் ஏறினார். பஸ்சில் சென்று கொண்டிருக்கும் போது பர்ஸ்சை சரிபார்க்கையில் அதில் வைத்திருந்த ரூ.90 ஆயிரம் காணாமல் போனது தெரிந்தது. ஆமத்துார் போலீஸ் விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X