பி.டெக்., லேட்ரல் சேர்க்கை விண்ணப்பம் குறைந்தது பிற மாநில மாணவர்கள் சேர வாய்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2021
05:30

புதுச்சேரி : பி.டெக்., லேட்ரல் என்ட்ரி சேர்க்கைக்கு, இந்தாண்டு குறைவான மாணவர்களே விண்ணப்பித்து உள்ளனர்.



அதனால், விண்ணப்பித்துள்ள தகுதியான அனைவருக்கும் சீட் கிடைக்கும் நிலை உள்ளது.புதுச்சேரி பாலிடெக்னிக் கல்லுாரியில் டிப்ளமோ படித்த மாணவர்களுக்காக, 10 சதவீத இடங்கள் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லுாரிகளில் ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.இவர்கள் பி.டெக்., படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம். நடப்பு கல்வியாண்டிற்கான 'லேட்ரல் என்ட்ரி' சேர்க்கைக்கு ஆன் லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தரவரிசைப் பட்டியலை சென்டாக் நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் இரண்டு அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லுாரிகளில் மொத்தம் 426 பி.டெக்., லேட்ரல் என்ட்ரி சீட்கள் உள்ளன. ஆனால், 321 மாணவ மாணவிகள் மட்டுமே லேட்ரல் என்ட்ரி சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ளனர்.



இதனால், விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் எந்தவித போட்டியும் இல்லாமல் சீட் கிடைக்கும் என்ற நிலை உறுதியாகி உள்ளது.விண்ணப்பித்த அனைவருக்கும் சேர்க்கை அளித்தாலும், 105 பி.டெக்., லேட்ரல் என்ட்ரி இடங்கள் காலியாக இருக்கும் சூழல் உள்ளது. இந்த இடங்கள், பிற மாநில மாணவர்களுக்கு செல்ல உள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் ஆறு அரசு பாலிடெக்னிக், இரண்டு தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிகளில் மொத்தம் 2,200 சீட்கள் உள்ளன. அப்படி இருந்தும், குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே பி.டெக்., லேட்ரல் சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ளனர்.என்ன காரணம்:இதுகுறித்து கல்வியாளர்கள் கூறியதாவது:தகவல் தொழில்நுட்பத் துறை உச்சத்தில் இருந்தபோது பொறியியல் படிப்பு, பாலிடெக்னிக் மாணவர்களின் கனவு படிப்பாக இருந்தது. இதன் காரணமாக பாலிடெக்னிக் கல்லுாரியில் டிப்ளமோ முடித்து, லேட்ரல் என்ட்ரி முறையில் பி.டெக்., படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டு படிப்பில் சேர ஆர்வம் காட்டினர்.ஆனால் இன்றைக்கு தகவல் தொழில்நுட்பத் துறையின் நிலைமை அப்படி இல்லை. அத்துறையில் கடந்த ஏழு ஆண்டுகளாக வேலை வாய்ப்பு தலைகீழாக மாறி விட்டது



வேலை வாய்ப்பு குறைந்துவிட்டது. சம்பளமும் குறைவாகவே கிடைக்கிறது.அதே நேரத்தில் பாலிடெக்னிக் முடித்த உடனே நல்ல கம்பெனியில் வேலை கிடைத்து விடுகின்றது. பொறியியல் கல்லுாரிகளில் கல்விக் கட்டணம் உயர்வும், லேட்ரல் என்ட்சி சேர்க்கை குறைவுக்கு ஒரு காரணம்.அதனால் பொறியியல் படிப்புகளை தவிர்க்க துவங்கி உள்ளனர். இதுமட்டுமின்றி மாநிலத்தில் 2,200 பாலிடெக்னிக் சீட்டுகள் இருந்தாலும் குறைவான எண்ணிக்கையில் தான் பாஸ் செய்கின்றனர். இதன் காரணமாகவே பி.டெக்., லேட்ரல் என்ட்ரி மாணவர் சேர்க்கை டல் அடிக்க துவங்கியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.



மாணவர்களுக்கு வாய்ப்புசென்டாக் அதிகாரிகள் கூறியதாவது:பி.டெக்., லேட்ரல் என்ட்ரி சேர்க்கைக்கு புதுச்சேரியை சேர்ந்த 321 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். பல்வேறு காரணங்களால் 93 விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்டுள்ளது.குறைவான எண்ணிக்கையில் விண்ணப்பம் வந்துள்ளதால், நிராகரிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களிடம் ஆட்சேபணைகள் கேட்டுள்ளோம். இதில் தகுதியானவர்கள் கிடைத்தால், சேர்க்கை ஒதுக்கீடு செய்யப்படும். இல்லையெனில், காலியிடங்கள் பிற மாநில மாணவர்களைக் கொண்டு நிரப்பப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X