புவனகிரி அருகே மின் ஒயரை மிதித்த கூலித்தொழிலாளி சாவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2021
05:33

புவனகிரி : புவனகிரி அருகே இயற்கை உபாதைக்கு சென்ற கூலித்தொழிலாளி அறுந்து கிடைந்த மின் ஒயரை மிதித்தவர் மின்சாரம் தாக்கி இறந்தார்.கடலுார் மாவட்டம், புவனகிரி அடுத்த பி.உடையூர் குளத்துமேட்டுத்தெரு செம்புலிங்கம் மகன் தமிழரசன்,25; கூலித்தொழிலாளி. இவருக்கும் அதேப் பகுதி தெற்குத் தெரு ரவிச்சந்திரன் மகள் பிரியா,22; என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.



நிறைமாத கர்ப்பினியான பிரியாவிற்கு நேற்று வளைகாப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.இந்நிலையில் வீட்டிற்கு உறவினர்கள் வந்திருந்த நிலையில் தமிழரசன் நேற்று காலை இயற்கை உபாதைக்காக ஐயனார்கோவில் பின் பக்கம் உள்ள வயல் பகுதிக்கு நடந்து சென்றார். அங்கு அறுந்து கிடந்த மின் ஒயரை கவனிக்காமல் மிதித்தார்.இதில் மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். அவருடன் சென்ற நாயும் இறந்தது. தகவலறிந்த மின் துறை பணியாளர் விரைந்து வந்து மெயின் சுவிட்சை நிறுத்தி, இறந்து கிடந்தவர் உடலை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பினர்.புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X