சிறுபாக்கம் அருகே விபத்து என்.எல்.சி., ஊழியர் பலி | கடலூர் செய்திகள் | Dinamalar
சிறுபாக்கம் அருகே விபத்து என்.எல்.சி., ஊழியர் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 அக்
2021
05:38

சிறுபாக்கம் : சிறுபாக்கம் அருகே சாலையோர புளியமரத்தில் கார் மோதியதில் என்.எல்.சி., ஊழியர் இறந்தார்.



அவரது மகள் காயமடைந்தார்.நெய்வேலியைச் சேர்ந்தவர் பாலசுந்தரம், 55; என்.எல்.சி.,யில் பணி புரிந்தார். இவரது மகள் ஸ்வேதா, 16; நாமக்கல் தனியார் பள்ளியில் படிக்கிறார். நேற்று அவரை (டி.என். 22 சிஎல் 3775) சிப்ட் டிசைர் காரில் அழைத்து கொண்டு நெய்வேலிக்கு வந்தார். நேற்று பகல் 1:00 மணியளவில் சேலம் - விருத்தாசலம் சாலையில், சிறுபாக்கம் சோதனை சாவடி மையம் அருகே வந்த போது, எதிர்பாராத விதமாக சாலையோர புளியமரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது. அதில், பாலசுந்தரம் சம்பவ இடத்திலேயே இறந்தார். காயமடைந்த அவரது மகள் ஸ்வேதா, 16, வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிறுபாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X