அ.தி.மு.க. பொன்விழா கொண்டாட்டம் | மதுரை செய்திகள் | Dinamalar
அ.தி.மு.க. பொன்விழா கொண்டாட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 அக்
2021
05:41


திருமங்கலம் : திருமங்கலம் அருகே குன்னத்துார் அம்மா கோயிலில் அ.தி.மு.க., பொன்விழா ஆண்டு முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் கொண்டாடப்பட்டது.



எம்.எல்.ஏ., அய்யப்பன், ஜெ.,பேரவை மாநில துணை செயலாளர் வெற்றிவேல், மாவட்ட பொருளாளர் திருப்பதி, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் ராமசாமி, அன்பழகன், மகாலிங்கம், திருமங்கலம் நகர் பொறுப்பாளர் விஜயன் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.உதயகுமார் பேசியதாவது: அ.தி.மு.க., சந்திக்காத வெற்றியும் அல்ல தோல்வியும் அல்ல.



வெற்றி பெற்றபோது இறுமாப்புக் கொண்டு நாங்கள் ஆடவும் இல்லை. தோல்வி அடைந்தபோது ஏமாற்றமடைந்து முடங்கி விடவில்லை.50 ஆண்டு கால வரலாற்றில் 11 தேர்தலில் 7 தேர்தல்களில் அ.தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது.30 ஆண்டுகாலம் ஆட்சி பொறுப்பில் இருந்துள்ளது. உண்மையான மக்கள் செல்வாக்கு மற்றும் தொண்டர்கள் உள்ள ஒரே இயக்கம் அ.தி.மு.க., என்றார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X