சின்னசேலம் : நேபாலில் நடந்த கபடி போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்ற சின்னசேலம் அடுத்த தாகம்தீர்த்தாபுரத்தைச் சேர்ந்த விஜயபாரதி, காளசமுத்திரம் நிஷா மற்றும் சந்தியா, வாசுதேவனுார் அபினா ஆகியோர் தங்கம் வென்றனர்.
தங்கம் வென்று திரும்பிய 4 மாணவிகளுக்கும் தாகம் தீர்த்தாபுரம் கிராமத்தை சேர்ந்த தாகம் இளைஞர்கள் குழு மற்றும் பொதுமக்கள் சார்பில் பாராட்டு விழா நடந்தது. விழாவில் தங்கம் வென்ற மாணவிகளுக்கு பதக்கம், பாராட்டுச் சான்றிதழ், மரக்கன்றுகள் மற்றும் நினைவு கோப்பை ஆகியவை வழங்கப்பட்டது.