தார்ச்சாலை இன்றி கிராம மக்கள் அவதி  | சிவகங்கை செய்திகள் | Dinamalar
தார்ச்சாலை இன்றி கிராம மக்கள் அவதி 
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 அக்
2021
05:41

திருப்புவனம் : திருப்புவனம் அருகே மேலராங்கியத்தில் தார்ச்சாலை இன்றி கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.



மேலராங்கியத்தில் கண்மாய் கரையை ஒட்டி 50க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். மேலராங்கியன் கிராமத்தில் இருந்து குடியிருப்பிற்கு செல்ல சாலை வசதி இல்லை. கண்மாய் கரை வழியாக நடந்து செல்கின்றனர்.மழை காலங்களில் 2 கி.மீ., சுற்றி செல்ல வேண்டியுள்ளது. அவசரத்திற்கு ஆட்டோ உள்ளிட்ட எந்த வாகனமும் வருவதில்லை. பள்ளி செல்லும் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.



கண்மாய் கரையை ஒட்டி சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இன்று வரை தார்ச்சாலை அமைக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் தார்ச்சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X