பண்ருட்டி அருகே போலீஸ் ஏட்டை மினி லாரி ஏற்றி கொல்ல முயற்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2021
05:41

பண்ருட்டி : பண்ருட்டி அருகே, மணல் கடத்தல் பிரிவு போலீஸ் ஏட்டை, மினி லாரியை ஏற்றி கொல்ல முயன்றவரை காடாம்புலியூர் போலீசார் தேடி வருகின்றனர்.



கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த வீரசிங்கன்குப்பம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சங்கர், 36; இவர் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக உள்ளார். எஸ்.பி., உத்தரவின்பேரில் மணல் கடத்தல் தடுப்பு பிரிவில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, ஏட்டு சங்கர் காடாம்புலியூர் அடுத்த கீழ்மாம்பட்டு பஸ்நிறுத்தம் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டார்.



நேற்று அதிகாலை 1:45 மணியளவில், சாத்திப்பட்டு-கீழ்மாம்பட்டு சாலையில் இருந்து வேகமாக வந்த பதிவெண் இல்லாத மினி லாரியை நிறுத்தி வாகனத்தின் பின் ஏறி பார்த்தார். மினி லாரியில் மணல் கடத்தி வந்தது தெரிந்தது. அவரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்த ஏட்டு சங்கரை, மினி லாரி டிரைவர் ஆபாசமாக திட்டி, மினி லாரியை எடுத்துச் செல்ல முயன்றார்.அப்போது ஏட்டு பைக்கில் மினி லாரி முன் சென்று வழிமறித்தார்.



பைக் மீது மினி லாரியால் மோதி விட்டு லாரி டிரைவர் தப்பினார். பலத்த காயமடைந்த சங்கர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்து, பின் மேல்சிகிச்சைக்கு கடலுார் அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டார்.இது குறித்து ஏட்டு சங்கர் அளித்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில் மணல் கடத்திய சாத்தமாம்பட்டு சேர்ந்த டிரைவர் சதீஷ்குமார் என்பது தெரிந்தது. தனிப்படை அமைத்து அவரை தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X