மகன் மாயம் தந்தை புகார் | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
மகன் மாயம் தந்தை புகார்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 அக்
2021
05:53

வானுார் : வானுார் அருகே மகனைக் காணவில்லை என தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.வானுார் அடுத்த கொண்டலாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் கபிலன், 22; மினி வேன் டிரைவர்.



இவர், கடந்த 4ம் தேதி ஒலக்கூரில் உள்ள அரி, 22; என்பவருடன் வேலைக்குச் செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை.கடந்த நான்கு நாட்களுக்கு முன், வெங்கடேசன், கபிலனின் மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசிய போது, ஆயுத பூஜைக்கு வருவதாகக்கூறியுள்ளார். ஆனால் வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இது குறித்து வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில், வானுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X