கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட பெண் சாவு | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட பெண் சாவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 அக்
2021
05:56

சின்னசேலம், : சின்னசேலம் அருகே கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட பெண் இறந்தார்.



சின்னசேலம் அடுத்த நமச்சிவாயபுரத்தைச் சேர்ந்தவர் முத்தமிழன். இவரது மனைவி வெண்ணிலா, 28; கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடந்து. 3 வயது மற்றும் 10 மாதத்தில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில், வெண்ணிலா மீண்டும் 3 மாத கர்ப்பமாக இருந்தார். இதனால், கடந்த 12ம் தேதி முத்தமிழன் கச்சிராயபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி, வெண்ணிலாவிற்கு கொடுத்துள்ளார்.இதனால், வெண்ணிலாவிற்கு வயிற்று வலியுடன், ரத்தப்போக்கு ஏற்பட்டது. உடன், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர், நேற்று முன்தினம் மாலை இறந்தார்.வெண்ணிலாவின் தந்தை கலியமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் சந்தேக மரணம் பிரிவின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X