மாவட்டம் முழுவதும் தொழுநோய் பாதிப்பை கண்டறியும் பணிகள் தீவிரம்! | தேனி செய்திகள் | Dinamalar
மாவட்டம் முழுவதும் தொழுநோய் பாதிப்பை கண்டறியும் பணிகள் தீவிரம்!
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 அக்
2021
06:08

தேனி மாவட்டத்தில் தொற்றும், தொற்றா தொழு நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. புதிதாக 100க்கும் மேற்பட்ட தொழு நோயாளிகள் கண்டறியப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். தொழு நோயை வெளியே கூற பலர் கூச்சப்படுகின்றனர்.



மேலும் தேமல் போன்ற அறிகுறியை சாதாரணமாக கருதி பலர் அலட்சியம் செய்கின்றனர். இதனால் அது அவர்களின் நரம்புகளை தாக்கக்கூடும். இது பெரும் பிரச்னைக்கு வழிவகுக்கும். இதை தடுக்கவே மாவட்டம் முழுவதும் தொழுநோய் பாதிப்பை கண்டறியும் பணிகள் துவங்கி நடந்து வருகிறது.



இதுகுறித்து தொழுநோய் தடுப்பு துறை துணை இயக்குனர் ரூபன் ராஜ் கூறுகையில், 'மாவட்டத்தில் தொழுநோய் பாதிப்பை கண்டறிய கிராமங்கள்தோறும் சர்வே பணி நடக்கிறது. இதில் 600 தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். ஜூன் மாதம் துவங்கிய சர்வே டிசம்பர் வரை நடக்கிறது. தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று தொழுநோய் பாதிப்பு உள்ளதா என்பதை பரிசோதிக்கின்றனர்.



பாதிப்பு கண்டறியப்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.மேலும் பொதுமக்களும் தொழுநோய் குறித்த அச்சத்தை கைவிட வேண்டும். இந்நோய் பாதிப்பு ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால் மட்டுமே குணப்படுத்த முடியும். எனவே அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்'' என்றார்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X