திண்டிவனம் அரசு மருத்துவமனையில் பாழாகும் உள் நோயாளி அட்டெண்டர்களுக்கான கட்டடம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2021
06:12

திண்டிவனம், : முன்னாள் முதல்வரால் ஒரு கோடி ரூபாய் செலவில், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளின் அட்டெண்டர் தங்குவதற்காக கட்டப்பட்ட கட்டடம் திறக்கப்படாமல் உள்ளது.



திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் திண்டிவனம் மற்றும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த நோயாளிகள் அதிக அளவில் சிகிச்சைக்காக வருகின்றனர்.தினந்தோறும் அதிகளவில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் உதவியாக வருபவர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகளுடன் தங்குமிடம் இல்லாததால் பாதிக்கப்பட்டனர்.



பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனரகத்தின் உத்தரவுப்படி, தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளின் அட்டெண்டர்கள் தங்குவதற்காக ஒரு கோடி ரூபாய் செலவில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் சிறப்பு தங்கும் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.



இந்த கட்டடத்தில் 100 உள்நோயாளிகளின் அட்டெண்டர்கள் தங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.புதியதாக கட்டப்பட்ட கட்டடம் கடந்த பிப்ரவரி 22ம் தேதி விழுப்புரத்தில் நடந்த அரசு விழாவில், அப்போதைய முதல்வர் பழனிசாமி, காணொலி மூலம் திறந்து வைத்தார்.திறப்பு விழா நடந்து 7 மாதங்களைக் கடந்த நிலையில், இன்று வரை புதிய கட்டடம் யாருக்கும் பயன்பாடின்றி பூட்டிக் கிடக்கிறது.மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உள் நோயாளிகளின் அட்டெண்டர்கள் மருத்துவமனை வளாகத்தில் சிறிய அளவில் தனியார் பங்களிப்புடன் கட்டப்பட்ட ஓய்வறையில் தங்கும் பரிதாப நிலை உள்ளது.



ஏழை மக்கள் நடுத்தர மக்கள் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் பகல், இரவு நேரத்தில் தங்கும் நோக்கத்தில் கட்டப்பட்டுள்ள இக்கட்டடம் பூட்டி கிடப்பது குறித்து முன்பு கேட்ட போது, சட்டசபை தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருப்பதால் திறக்க முடியவில்லை. தேர்தல் முடிந்த பிறகு திறக்கப்படும் என நகராட்சி தரப்பில் தெரிவித்தனர்.சட்டசபை தேர்தல் முடிந்து பல மாதங்கள் கடந்து தற்போது ஊரக உள்ளாட்சித் தேர்தலும் முடிந்துள்ளது. இனியாவது புதிய கட்டடத்தைத் திறக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
HONDA -  ( Posted via: Dinamalar Android App )
18-அக்-202108:39:11 IST Report Abuse
HONDA அவங்க தான் அக்கறை எடுக்கவில்லை என்றாலும் தற்போதைய அரசாவது தி றந்துவைத்து இருக்கவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X