மழையால் நிரம்பி வழியும் செங்கல் தடுப்பணை: மூழ்கிய தரைப்பாலத்தால் மக்கள் அவதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2021
10:10

சேலம்: சேலம் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால், மூழ்கிய தரைப்பாலத்தால் மக்கள் சிரமப்பட்டனர்.


சேலம் மாவட்டத்தில், நேற்று முன்தினம் விட்டுவிட்டு, இடியுடன் கூடிய கனமழை, மிதமழை என, மாறி மாறி பெய்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அதிகபட்சம், மேட்டூரில், 92.2 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. பெ.நா.பாளையத்தில், 45, ஏற்காடு, 39.6, கெங்கவல்லி, 25, சேலம், 24.7, ஆத்தூர், 22.4, ஆணைமடுவு, 17, வீரகனூர், 7, ஓமலூர், 6, இடைப்பாடி, 4.6, காடையாம்பட்டி, 3.3, கரியகோவில், 2 மி.மீ., மழை பெய்தது. தொடர் மழை காரணமாக, தாழ்வான பகுதிகளில் குளம் போல தேங்கும் மழை நீரால் மக்கள், அவதிக்குள்ளாகி வருகின்றனர். அத்துடன், கொசுத்தொல்லை அதிகமாகி, நோய் பரவும் அபாயம் உள்ளது. தவிர மழையால், தொட்டி ஏரி, முக்கனேரி, கன்னங்குறிச்சி புதுஏரி ஆகியன முழுமையாக நிரம்பி விட்டன. இஸ்மாயில்கான் ஏரி, தாதம்பட்டி ஏரி தலா, 50 சதவீதம் நிரம்பி, மேல் நோக்கி வருகிறது. ஸ்மார்ட் சிட்டி பணியால், பள்ளப்பட்டி ஏரி, குமரகிரி ஏரி நிரம்பவில்லை. கற்பகம் ஓடை முழுமையாக நிரம்பி, உபரிநீர் அங்குள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி, வேகமாக வெளியேறி வருகிறது. தடுப்பணை எதுவும் உடையவில்லையென, பொதுப்பணி அதிகாரிகள் தெரிவித்தனர். தரைப்பாலத்தை உயர்த்தி கட்ட, ஊராட்சி மூலம், ஒப்பந்தம் விடப்பட்டுள்ளதால், மழைக்கு பின் கட்டுமானம் தொடங்கும் என, வருவாய்த்துறை சார்பில், கலெக்டருக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


அதேபோல, செங்கல் தடுப்பணை நிரம்பி, வெளியேறும் மழைநீர், அங்குள்ள தரைப்பாலத்தை மறைத்தப்படி செல்வதால், வாகனங்கள், பொதுமக்கள், சிரமத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். நிரம்பிய ஏரிகளில் இருந்து வழிந்தோடும் உபரிநீரால், 15 ஆண்டுக்கு பின், திருமணி முத்தாறில், அதிக வெள்ளம் செல்கிறது. இதேநிலை தொடர்ந்தால், அதன் முழு கொள்ளளவான, 30 ஆயிரம் கன அடியை, விரைவில் எட்டும் என, பொதுப்பணி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். திருமணி முத்தாறு வெள்ளம், நிறைவாக, நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அடுத்த நஞ்சடையார் என்கிற இடத்தில், காவிரியுடன் கலந்து சங்கமிக்கிறது. சிவதாபுரம் பகுதிகளில், விளை நிலங்களில் தண்ணீர் தேங்கிய, ??? ஏக்கர் பரப்பளவு நெற்பயிர்கள் சேதமாகின.


* கடந்த, 10 நாட்களாக மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருவதால், திருமணிமுத்தாற்றில் கழிவுநீருடன், மழைநீரும் கலந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் குறுக்கே பூலாவரி ஆத்துக்காடு, இனாம் பைரோஜி புதுப்பாளையம் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள தரைப்பாலங்கள் வெள்ள நீரில் மூழ்கின. இந்த இரண்டு பாலங்களும், 30 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டது. பராமரிப்பு இல்லாமல், ரசாயன கழிவுகளால் பாலத்தின் தடுப்புகள் மற்றும் அடிப்பகுதி அரிக்கப்பட்டு எப்போது வேண்டுமானாலும் வெள்ளத்தில் உடைந்து அடித்து செல்லப்படும் நிலையில் உள்ளது.


* வாழப்பாடி அடுத்த அயோத்தியாபட்டணம் அருகே, எம்.பாலப்பட்டி, ஏற்காடு மலை அடிவார பகுதியில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் எம்.பாலப்பட்டி பகுதியில் உள்ள மலையாறு வாய்க்காலில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓட தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் மழையால் வாய்க்காலில் தண்ணீர் அதிகளவில் பெருக்கெடுத்து ஓடியதால், வாய்க்கால் கரை உடைப்பு ஏற்பட்டது. இதனால் எம்.பாலப்பட்டி பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் நெல், சோளம், மரவள்ளி உள்ளிட்ட பயிர்கள், நந்திவட்டம், ரோஜா, சாமந்தி உள்ளிட்ட பூந்தோட்டங்கள் தண்ணீரில் மூழ்கின. இதையடுத்து அயோத்தியாபட்டணம் வேளாண்மை உதவி இயக்குனர் பாரதி, தோட்டக்கலை அலுவலர் விஜயலட்சுமி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று, சேதம் ஏற்பட்ட வயல்கள், பூந்தோட்டங்களை ஆய்வு செய்தனர்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X