போதிய முதலீட்டு நிதியால் வட்டியில் மாற்றம் இல்லை | சேலம் செய்திகள் | Dinamalar
போதிய முதலீட்டு நிதியால் வட்டியில் மாற்றம் இல்லை
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 அக்
2021
10:11

சேலம்: கூட்டுறவு நிறுவனங்களில், உறுப்பினர்கள் முதலீடுக்கான வட்டி, நகை கடனுக்கான வட்டி மற்றும் மத்திய கூட்டுறவு வங்கியில், இதர கூட்டுறவு நிறுவனங்கள் பெறும், காசு கடனுக்கான வட்டியை உயர்த்தி, பதிவாளர் சண்முகசுந்தரம் செப்.,30ல், உத்தரவிட்டார். அதை அக்.,1ல் இருந்து, அமல்படுத்தவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டது. எனினும், சேலம் மண்டலத்தில், வட்டி மாற்றம் அமலுக்கு வரவில்லை. இது தொடர்பாக, கடந்த 16ல், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர் ரவிக்குமார் பிறப்பித்துள்ள உத்தரவு: புதிய அறிவிப்பாக, 333 நாட்கள் முதலீடுக்கு, 6.5 சதவீதம் வட்டி பெறலாம். தவிர, 50 லட்ச ரூபாய்க்கு மேல் முதலீடு செய்தால், அதற்கான வட்டி, 6.5ல் இருந்து, 6.75 ஆக உயர்த்தப்படுகிறது. இவை அனைத்தும் வரும், 20 முதல் அமலுக்கு வருகிறது என, உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலாண் இயக்குனர் ரவிக்குமார் கூறுகையில், ''சேலம் மண்டல கூட்டுறவு நிறுவனங்களில், முதலீடு நிதி போதுமானதாக உள்ளது. அதிக வட்டி கொடுத்து, முதலீடு திரட்ட வேண்டிய அவசிய, கட்டாய தேவையில்லை. எனவே, பதிவாளர் அறிவித்தபடி, வட்டி மாற்றத்தில் திருத்தம் செய்யாமல், பழைய நிலையே தொடர்கிறது,'' என்றார்.

 

Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X