கொங்கணாபுரம், கரட்டூரில் அ.தி.மு.க., பொன்விழா | சேலம் செய்திகள் | Dinamalar
கொங்கணாபுரம், கரட்டூரில் அ.தி.மு.க., பொன்விழா
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 அக்
2021
10:13

இடைப்பாடி: அ.தி.மு.க.,வின் பொன்விழா ஆண்டு தொடக்க நாளான நேற்று கொங்கணாபுரம், கரட்டூர் பகுதியில் கட்சி கொடியேற்றி, நலத்திட்ட உதவிகள், இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. அ.தி.மு.க., கட்சி தொடங்கப்பட்டு, 50ம் ஆண்டு பொன்விழா தொடங்கியது. இதையடுத்து கொங்கணாபுரம் ஒன்றியம், கரட்டூரில் ஒன்றியக்குழு தலைவரும், ஒன்றிய ஜெ.,பேரவை செயலருமான மணி, கட்சி கொடியேற்றி வைத்தார். பின்னர், 500க்கும் மேற்பட்ட மக்களுக்கு வேட்டி, சேலை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் வைத்தியலிங்கம், கூட்டுறவு சங்க தலைவர் முத்துசாமி, கூட்டுறவு சங்க துணைத் தலைவர் ரவி உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் வெள்ளாளபுரம், கச்சுபள்ளி, கொங்கணாபுரம் பேரூராட்சி பகுதிகளிலும் ஒன்றியக்குழு தலைவர் மணி கட்சி கொடியேற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X