எஸ்.இ.டி.சி.,பஸ்கள் இடதுபுற நெடுஞ்சாலை உணவகங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும் | சேலம் செய்திகள் | Dinamalar
எஸ்.இ.டி.சி.,பஸ்கள் இடதுபுற நெடுஞ்சாலை உணவகங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 அக்
2021
10:25

சேலம்: அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்கள், நெடுஞ்சாலைகளில் இடது புறம் அமைந்துள்ள உணவகங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும். இதற்காக சாலையை கடப்பது தெரிய வந்தால், டிரைவர், கண்டக்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, பொது மேலாளர் (இயக்கம்) குணசேகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இது குறித்து அவர் கோட்ட, கிளை மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விபரம்: எஸ்.இ.டி.சி., பஸ்கள் தடத்தில் செல்லும் போது, இடது புற திசையில் உள்ள உணவகங்களில் நிறுத்தாமல், சாலையின் குறுக்கே கடந்து எதிர்புற திசையில் உள்ள உணவகங்களில் நிறுத்தப்படுவதாக தெரிய வருகிறது. இதனால், அதிகளவில் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இனி வரும் காலங்களில், இடதுபுற திசையில் உள்ள உணவகங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும். இதை மீறும் டிரைவர், கண்டக்டர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அனைத்து பயண சீட்டு பரிசோதகர்களும், அவ்வப்போது கண்காணித்து தக்க நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். அனைத்து கிளை மேலாளர்களும் தங்கள் கிளையில் பணிபுரியும் டிரைவர், கண்டக்டர்களுக்கு உணவகங்களில் நிறுத்துவது குறித்து விளக்கம் அளித்து, தவறுகள் நடக்காதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X