இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5.25 லட்சம் மஞ்சள் பறிமுதல் | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5.25 லட்சம் மஞ்சள் பறிமுதல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 அக்
2021
23:55

ராமேஸ்வரம் : பாம்பனில் இருந்து இலங்கைக்கு கடத்த வீட்டில் பதுக்கி வைத்துஇருந்த ரூ.5.25 லட்சம் மஞ்சள் மூடையை க்யூ போலீசார் பறிமுதல் செய்தனர்.



பாம்பன் பட்டாளத்தார் தெருவைச் சேர்ந்த முகம்மதுமீரான் மகன் முகம்மதுரபீக்கான்53, வீட்டில் 7 மூடையில் 175 கிலோ மஞ்சள் பதுக்கி வைத்துஇருந்தார். இதனை இலங்கைக்கு கள்ளப்படகில் கடத்தி சென்று விற்க திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது. தகவலறிந்த க்யூ போலீசார் வீட்டில் இருந்த மஞ்சள்மூடையை பறிமுதல் செய்தனர். முகம்மது ரபீக்கான் தலைமறைவு ஆனார். பின் மஞ்சள் மூடையை பாம்பன் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதித்ததால், அங்கு ஒரு கிலோ மஞ்சள் ரூ.3 ஆயிரத்திற்கு விற்கிறது.



இதனால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபத்தில் இருந்து பல கடத்தல்காரர்கள் உருவாகி கள்ளப்படகில் மஞ்சளை கடத்தி செல்கின்றனர். தற்போது பறிமுதல்செய்த மஞ்சளின் இலங்கை மதிப்பு ரூ.5.25 லட்சம் ஆகும்.மேலும் பாம்பன் வடக்கு கடல் பகுதியில் நின்ற படகில் இருந்து பத்து மூடைகளில் இருந்த 300 கிலோ மஞ்சளை மீனவர்கள் எடுத்து வந்து மரைன் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X