கடலூரில் மருத்துவ கல்லூரி | கடலூர் செய்திகள் | Dinamalar
கடலூரில் மருத்துவ கல்லூரி
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 அக்
2021
04:35

கடலுார் : கடலுாரில் மருத்துவ கல்லுாரி துவங்க வேண்டும் என, மா.கம்யூ., சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.



மா.கம்யூ., கடலுார் நகர 23 வது மாநாடு, சூரப்பநாயக்கன்சாவடி அலுவலகத்தில் நடந்தது. ஆனந்த், கருணாகரன் சாந்தாகுமாரி தலைமை தாங்கினர். மாநாட்டு கொடியை கிருஷ்ணமூர்த்தி ஏற்றினார். ஸ்டாலின் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். நகர் குழு உறுப்பினர் செந்தில்குமார் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ஆறுமுகம் மாநாட்டை துவக்கி வைத்தார். நகர செயலாளர் அமர்நாத், அறிக்கை முன்வைத்தார். மாநில குழு உறுப்பினர் மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மருதவாணன், கருப்பையன், சுப்ராயன் வாழ்த்தி பேசினர். நகர செயலாளராக அமர்நாத் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். மாநாட்டை நிறைவு செய்து மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசினார். கூட்டத்தில், கடலுாரில் மருத்துவ கல்லுாரி துவங்க வேண்டும்,



அரசு பெண்கள் கலைக்கல்லுாரி, அரசு பொறியியல் கல்லுாரி சட்டக் கல்லுாரி துவங்க வேண்டும். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை தரம் உயர்த்தி நரம்பியல் மற்றும் இதய நோய் பிரிவு உருவாக்க வேண்டும். நகராட்சி மருத்துவ மனைகளை அதிகப்படுத்தி தேவையான மருத்துவர்கள், பணியாளர்கள் நியமிக்க வேண்டும். கடலுாரில் உள்ள புராதன கட்டடங்களை பாதுகாத்து வரலாற்றுச் சின்னங்களாக மாற்ற வேண்டும். சில்வர் பீச்சை சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும்.



கடலுார் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். புறவழிச் சாலை, புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என, அரசை வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X