பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 அக்
2021
04:58

கடலுார் : கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.பிரதோஷ தினமான நேற்று கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.



நேற்று மாலை 4:00 மணிக்கு சுவாமி, அம்பாள் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சி.என்.பாளையம் மலையாண்டவர் என்ற ராஜராஜேஸ்வரர், சொக்கநாதர் ஆகிய கோவில்களில் விநாயகர், நந்தி, ஈஸ்வரர், அம்மன், பிரதோஷ நாயகர் ஆகிய சுவாமிகளுக்கு மாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், மகா தீபாராதனை நடந்தது.



பிரதோஷ நாயகர் ரிஷப வாகனத்தில் ஆலய உட்பிரகார உலாவாக வந்து அருள்பாலித்தார். பெண்ணாடம்பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், சந்திர மவுலீஸ்வரர் சுவாமிக்கு பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று காலை 10:15 மணியளவில் உலக மக்கள் நலன்வேண்டி, மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. மாலை 5:00 மணியளவில் பிரகாரத்தில் உள்ள சந்திர மவுலீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்; மாலை 5:30 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது.



பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதா கிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர். பெண்ணாடம் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர், இறையூர் அன்னபூரணி உடனுறை தாகம் தீர்த்தபுரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X