சித்தானந்த சுவாமி கோவிலில் | செய்திகள் | Dinamalar
சித்தானந்த சுவாமி கோவிலில்
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 அக்
2021
05:22

புதுச்சேரி : கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில், சோமவார பிரதோஷ சிறப்பு பூஜை நேற்று நடந்தது.



.புதுச்சேரி கிழக்கு கடற்கரைச்சாலை, கருவடிக்குப்பத்தில் பிரசித்தி பெற்ற குரு சித்தானந்த சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஐப்பசி மாத வளர் பிறை மற்றும் சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று மாலை நந்தி பகவானுக்கு, பால், தயிர், பன்னீர், மஞ்சள், இளநீர், தேன் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.



தொடர்ந்து, நந்தி பகவானுக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.கொரோனா தொற்று பரவல் காரணமாக, பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.பிரதேசஷ வழிப்பாட்டிற்கான ஏற்பாடுகளை தேவ சேனாதிபதி குருக்கள், சேது குருக்கள், சீனு குருக்கள் செய்திருந்தனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X