கடற்கரையில் செயற்கை மணல்பரப்பு மத்திய அமைச்சர் காணொலியில் பார்வை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 அக்
2021
05:28


புதுச்சேரி : புதுச்சேரி கடற்கரையில் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ள மணல் பரப்பை, மத்திய புவி அறிவியல் அமைச்சர் ஜிதேந்தர் சிங் காணொலி மூலம் ஆய்வு செய்தார்.



புதுச்சேரியில் கடற்கரையில் மறைந்து போன மணல் பரப்பை மீட்டெடுக்க, அரசு முடிவு செய்தது. இதற்காக, தேசிய கடல் தொழில்நுட்ப கழகம் சார்பில் மத்திய அரசு 24 கோடி ரூபாய் நிதி வழங்கியது.இதைத் தொடர்ந்து கடற்கரையில் செயற்கை மணல்பரப்பு உருவாக்கும் வகையில், தலைமைச் செயலகம் எதிரே, கடல் நீருக்கு அடியில் இரும்பு மிதவை அமைக்கப்பட்டது.இதனால் கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு உருவானது.



சுற்றுலா பயணிகள் மணல் பரப்பில் விளையாடியும் கடலில் குளித்தும் மகிழ்ந்து வருகின்றனர்.செயற்கையாக உருவாக்கப்பட்ட கடற்கரை மணற்பரப்பை, மத்திய புவி அறிவியல் அமைச்சர் ஜிதேந்தர் சிங் நேற்று காணொலி மூலம் பார்வையிட்டார். இதற்கான ஏற்பாடு, புதுச்சேரி தலைமை செயலகத்தில் செய்யப்பட் டிருந்தது.நிகழ்ச்சியில் தேசிய கடல் தொழில்நுட்ப கழக அறிவியல் அதிகாரி சுரேஷ், விஞ்ஞானிகள் பனிக்குமார், முல்லைவேந்தன், ராம்குமார், ராம்சந்தர், புதுச்சேரி அறியவில் தொழில்நுட்பத் துறை செயலர் ஸ்மித்தா,



பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஏழுமலை மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகள் மணல் பரப்பை பார்வையிட்டனர்.செயற்கை மணல்பரப்பு உருவாக்கிய அதிகாரிகளை மத்திய அமைச்சர் பாராட்டினார்.தேசிய கடல் தொழில்நுட்ப கழக அறிவியல் அதிகாரி சுரேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:புதுச்சேரி கடற்கரையில் உருவாக்கப்பட்டுள்ள மணல் பரப்பை மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் காணொலி மூலம் பார்வையிட்டார்.



புதுச்சேரி தலைமை செயலகம் முன் உள்ள கடலில் 975 டன் இரும்பு மிதவை அமைக்கப் பட்டுள்ளது.இது தேவையான மணலை கடற்கரையில் சேர்ப்பதுடன், குருசுக்குப்பம் பகுதியில் கடல் அரிப்பை தடுக்கும். மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் துார் வாரப்படும் மணலும் கடற்கரையில் கொட்டப்படுகிறது. இதனால் கடந்த காலங்களில் இருந்ததுபோல் அழகிய மணல் பரப்பு உருவாகியுள்ளது. அடுத்த கட்டமாக சீகல்ஸ் ஓட்டல் அருகே கடலில் இரும்பு மிததை அமைத்து, மணல் பரப்பு உருவாக்க திட்டம் தயாரிக்கப் பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X