மகன் இறுதி சடங்கின்போது தந்தை உயிரிழப்பு | செய்திகள் | Dinamalar
மகன் இறுதி சடங்கின்போது தந்தை உயிரிழப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 அக்
2021
05:31


புதுச்சேரி : ஐயங்குட்டிப்பாளையத்தில், மகன் இறுதி சடங்கின் போது மயங்கி விழுந்த தந்தை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.



புதுச்சேரி, ஐயங்குட்டிப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி,55 கூலித்தொழிலாளி. இவரது மகன் ராஜா,28. மது பழக்கம் உடைய இவர், மஞ்சள் காமாலை நோய் காரணமாக நேற்றுமுன்தினம் உயிரிழந்தார். இறுதி சடங்கு நேற்று காலை 10.௦௦ மணிக்கு வீட்டில் நடந்தபோது, பெரியசாமி திடீரென மயங்கி விழுந்தார்.



உடனே அவரை கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், பெரியசாமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவர் மாரடைப்பினால் இறந்தது தெரிய வந்துள்ளது.அதை தொடர்ந்து, தந்தை, மகன் ஆகிய இருவரது உடல்களையும் ஒரே பாடையில் எடுத்துச் சென்று, மாலை 6.00 மணியளவில் அடக்கம் செய்தனர்.மகன் இறந்த துக்கத்தில், தந்தை மாரடைப்பினால் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X