சணல் பைகளை தயாரிக்கும் சாதனை பெண்கள்; வயலூரில் தயாராகிறது அரசின் சணல் யூனிட் | மதுரை செய்திகள் | Dinamalar
சணல் பைகளை தயாரிக்கும் சாதனை பெண்கள்; வயலூரில் தயாராகிறது அரசின் சணல் யூனிட்
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 அக்
2021
06:22

மதுரை : தமிழக ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் பெட்கிராட் நிறுவனம் சார்பில் மதுரை வயலுார் பிள்ளையார்நத்தம் பகுதி பெண்கள் ஒருமாத கால சணல் பை தயாரிப்பு பயிற்சி பெற்றுள்ளனர். இவர்களுக்காக வயலுாரில் சணல் யூனிட் ஆரம்பிப்பதற்கான கட்டுமான பணி துவங்கியுள்ளது.



வயலுார் ஊராட்சி வயலும் வயல் சார்ந்த இடம் என்பதால் பெண்களுக்கு சணல்பை தயாரிப்பு என்பது புதுமையான தொழிலாக மாறியுள்ளது என்கிறார் பயிற்றுனர் ேஹமலதா. அவர் கூறுகையில்,''பென்சில் பவுச், வாட்டர் பாட்டில் பை, பைல், தாம்பூலப்பை, ேஹண்ட் பேக் என 12 க்கும் மேற்பட்ட டிசைன்களில் 30 பெண்கள் முழுமையாக கற்று கொண்டனர். இனி வெளி ஆர்டர்கள் வாங்கி அவர்களை தைக்க சொல்லி வருமானத்தை பெருக்க செய்யலாம்'' என்றார்.



பயிற்சி குறித்து பெண்கள் கூறியதாவது:ராஜேஸ்வரி: பயிற்சி பெறுவதற்கு முன்பு தைக்க தெரியாது. இங்குள்ள நடுநிலைப் பள்ளி வளாகத்தில் தையல் மிஷின் வைத்து ஒருமாத பயிற்சி தந்தனர். சணல் துணி, ஜிப், நுால்கண்டு, வெல்க்ரோ ஆகியவற்றை மதுரையிலே வாங்க முடிவதால் மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டியதில்லை. மிஷின் வாங்குவதற்கு லோன் தந்தால் நன்றாக இருக்கும்.



சீலைக்காரி: என்னென்ன நிறங்களில் பை தைக்கலாம் என நிறப்பொருத்தம் கற்றுத் தந்தார்கள். ஒரு மீட்டர் துணி வாங்கினால் மூன்று ேஹண்ட் பேக் தைக்க முடிகிறது. மிஷின் வாங்கி விட்டால் பெட்கிராட் நிறுவனம் மூலம் ஆர்டர் தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.சங்கீதா: இங்கே குமாரம் சந்தையில் எங்கள் சணல் பொருட்களை விற்க ஏற்பாடு செய்துள்ளனர். அதுமட்டுமின்றி மால், பேன்சி ஸ்டோர்களிலும் விற்பனை வாய்ப்பு தேடிச் செல்வோம். வீட்டிலிருந்த எங்களுக்கு தொழில் செய்ய வழிகாட்டியுள்ளனர்.



ராமஜெயம்: நாங்களாக வெளியில் கற்றுக் கொண்டால் ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டும். சணல் துணியிலிருந்து நுால் கண்டு வரை எல்லாம் இலவசமாகவே தந்தார்கள். செலவின்றி ஒரு தொழில் கற்றுக் கொண்டது பெருமையாக உள்ளது என்றனர்.பெட்கிராட் நிறுவனர் சுப்புராம், செயலாளர் சாராள் ரூபி, பொருளாளர் கிருஷ்ணவேணி கூறியதாவது: 30 பெண்களும் சணபல் பை பயிற்சி பெற்று விட்டனர். அவர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு அளித்தால் தான் தொழிலில் ஈடுபட முடியும்.



வயலுார், பிள்ளையார்நத்தம், மூலக்குறிச்சி கிராம பெண்களுக்கான சுயவேலை வாய்ப்பளிக்கும் வகையில் வயலுாரில் சணல் யூனிட் ஆரம்பிக்க அரசு இடம் ஒதுக்கியுள்ளது. பஞ்சாயத்து அளவிலான மகளிர் சுயஉதவி குழு கூட்டமைப்பு மூலம் பொறுப்பேற்று நடத்துவார்கள். எத்தனை இயந்திரங்கள் தேவையோ அரசே வழங்கும். ஆர்டர் பெறுவதற்கும் உதவுவார்கள். வயலுாரில் தற்போது கட்டுமான பணி நடக்கிறது. இதன் மூலம் ஊரக பெண்கள் வருமானம் ஈட்டமுடியும் என்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X