சேலம்: சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதேபோல் 2வது அக்ரஹாரத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் கோவிலில் பூஜை நடைபெற்றது. மேலும் மாநகர, மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.