ஓமலூர்: ஓமலூர் அருகே ஆர்.சி.,செட்டிப்பட்டியில், புனித நிக்கோலாஸ் ஆர்.சி., நடுநிலைப்பள்ளி உள்ளது. அதில், 6, 7, 8 ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் என, 15 பேர் கொண்ட, இளம் மாணவர்கள் இயக்கம் உள்ளது. அதன் மூலம், பள்ளி தலைமை ஆசிரியர் லியோபால் தலைமையில், நேற்று பள்ளி வளாகத்தில், உலர் பொருட்களை வங்க வந்த மாணவ, மாணவியர், பெற்றோர்களுக்கு, டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கப்பட்டது.