பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, ஜமீன் ஊத்துக்குளி ராமகிருஷ்ணா நகரை சேர்ந்தவர் சிவக்குமார், 45, பஞ்சு வியாபாரி. இவர், தீபாவளி பண்டிகைக்கு புத்தாடை எடுக்க, வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்துடன் வெளியே சென்றுள்ளார்.திரும்பி வந்து பார்த்த போது, வீட்டு கதவு உடைக்கப்பட்டிருப்பதும், பீரோவை உடைத்து திறக்கப்பட்டிருப்பதும் தெரிந்தது. பீரோவில் வைத்திருந்த ஆறு பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது. இதையடுத்து, மேற்கு போலீசாரிடம் சிவக்குமார் புகார் அளித்தார். கைரேகைகள், கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை கொண்டு, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடுகின்றனர்.