நெகமம்:நெகமம் துணை மின்நிலையத்தில், மின்நுகர்வோர் குறை தீர் கூட்டம் இன்று நடக்கிறது.நெகமம் கோட்டத்துக்கான, மின்நுகர்வோர் குறை தீர் கூட்டம், இன்று, காலை, 11:00 மணிக்கு, மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. மேற்பார்வை பொறியாளர் ஸ்டாலின்பாபு தலைமை வகிக்கிறார்.கூட்டத்தில், நெகமம் கோட்டத்துக்கு உட்பட்ட மின்நுகர்வோர் பங்கேற்று, மின் வினியோகம் தொடர்பான, குறைகள் தெரிவித்து, நிவர்த்தி பெறலாம், என, நெகமம் துணை மின் நிலைய செயற்பொறியாளர் லட்சுமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.